அரவிந்த் கண் மருத்துவமனையும் ஸ்ரீராம் ஸ்ரேஸ்டா-வும் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம்

கோவை மாவட்ட ஸ்ரீராம் ஸ்ரேஸ்டா-வும் அரவிந்த் கண் மருத்துவமனையும் இணைந்து கோவை மாவட்டம் மதுக்கரையில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர்கள் பங்கேற்று அப்பகுதி மக்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சைகள் அளித்தனர். 

இதில் 15 பேருக்கு கண்ணில் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களுக்கு அரவிந்த் கண் மருத்துவமனையில் இலவச அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது. 

இதுகுறித்து இந்நிகழ்விற்கு ஏற்பாடு செய்திருந்தவர்கள் கூறுகையில், இந்த முகாமின் நோக்கம் சிறந்த கண் பாதுகாப்பு சிகிச்சை அளிப்பதாகும். இந்த நிகழ்வில் மக்களுக்கு கண்ணில் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது கண்களில் அதிக அழுத்தம் காரணமாக கண்களில் இருந்து மூளைக்குச் செல்லும் நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டு நிரந்தர கண்பார்வை பாதிப்பு ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளது. இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுகுறித்து எவ்வித அறிகுறியும் தெரியாது. இதை ஆரம்பகட்டத்திலேயே கண்டறிவதன் மூலம் கண்பார்வை இழப்பிலிருந்து தடுக்கலாம். இம்முகாமின் மூலம் மக்களுக்கு சிறந்த சேவையாற்ற முடிந்தது'' என்றார்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...