வால்பாறையில் கஞ்சா வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்டம்.!!

வால்பாறையில் கஞ்சா விற்பனை செய்து கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. தொடர்ந்து வால்பாறை நீதிமன்ற நீதிபதி உத்தரவின் பேரில் அவர் 15-நாள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.


வால்பாறை: வால்பாறையில் கஞ்சா விற்பனை செய்து கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்துள்ளது புது தோட்டம் எஸ்டேட். இங்குள்ள பத்து ஏக்கர் என்ற பகுதியில் வசித்து வந்தவர் இயேசு (வயது-52). கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் உத்தரவின் பேரில் வால்பாறை காவல் ஆய்வாளர் கற்பகம் தலைமையில், உதவி ஆய்வாளர் கார்த்திகேயன், சிறப்பு உதவி ஆய்வாளர் பாலாஜி, காவல் துறையினர் வால்பாறையில் பல்வேறு பகுதிகளில் திடீரென ஆய்வுகளை மேற் கொண்டனர்.

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம்வால்பாறை அடுத்த புதுத்தோட்டம் எஸ்டேட் பகுதியில் உள்ள 10-ஏக்கர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட யேசு (வயது-52) என்பவர் கைது செய்யப்பட்டார்.

தொடர்ந்து, அவரது வீட்டில் சோதனையிட்ட போது 3.700 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து வால்பாறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

தொடர்ந்து வால்பாறை நீதிமன்ற நீதிபதி உத்தரவின் பேரில் அவர் 15-நாள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில்,வால்பாறை புதுத்தோட்டத்தைச் சேர்ந்த கஞ்சா வியாபாரியான யேசு என்பவரைக் கோவை மாவட்ட ஆட்சியர்சமீரன் மற்றும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம்உத்தரவின்படி குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...