வால்பாறைக்கு சுற்றுலா சென்ற கோவை பள்ளி வாகனம் விபத்து; ஆசிரியைக்கு காயம்.

கோவை மதுக்கரையில் உள்ள பிருந்தாவன் வித்யாலயா என்ற தனியார் பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகள் இணைந்து வால்பாறைக்கு சுற்றுலா சென்ற போது, ஆழியார் அருகே விபத்து.


கோவை: வால்பாறை அருகே கோவை தனியார் பள்ளி வாகனம் விபத்துக்குள்ளான சம்பவத்தில், ஒரு ஆசிரியைக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

கோவை மதுக்கரையில் உள்ள பிருந்தாவன் வித்யாலயா என்ற தனியார் பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகள் இணைந்து வால்பாறைக்கு பள்ளி வாகனத்தில் சுற்றுலா சென்றுள்ளனர். பள்ளி வாகனம் பொள்ளாச்சி - வால்பாறை சாலையில் சென்று கொண்டிருந்த போது, ஆழியாறு புளியங்குடியில், தனியார் நிறுவன லாரி மீது பள்ளி வாகனம் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.



இதனால், பேருந்தின் முன்பக்க கண்ணாடி சுக்குநூறாக நொறுங்கியதோடு, பள்ளி ஆசிரியையான முத்துக்குமாரி என்பவர் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டார். இதுகுறித்து, தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த ஆசிரியையை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.



இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த ஆழியார் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...