கோவையில் செயின் பறித்த கொள்ளையர்களிடம் போராடிய பெண்; கீழே விழுந்து காயம்

கோவை: கோவையை அடுத்த பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள காளம்பாளையத்தைச் சேர்ந்தவர் நீலாவதி 34,. அதே பகுதியில், டெய்லராக உள்ள அவர் புதிதாக வாங்கிய மொபட்டில், வங்கிக்கு மாத தவணை கட்டுவதற்காக நேற்று துடியலூர் சென்றுள்ளார்.


கோவை: கோவையை அடுத்த பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள காளம்பாளையத்தைச் சேர்ந்தவர் நீலாவதி 34,. அதே பகுதியில், டெய்லராக உள்ள அவர் புதிதாக வாங்கிய மொபட்டில், வங்கிக்கு மாத தவணை கட்டுவதற்காக நேற்று துடியலூர் சென்றுள்ளார்.

பின்னர் அங்கிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, கவுண்டம்பாளையம், கட்டாஞ்சி மலை ரோட்டில் சென்று கொண்டிருந்த போது, பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த இரு மர்ம நபர்கள், அவரை பின் தொடர்ந்து வந்துள்ளனர்.

இதனை கவனித்த நீலாவதி, அவரது மொபட்டை வேகமாக ஓட்டியதாக தெரிகிறது. அப்போது, அவரை துரத்திச் சென்று அந்த இருவர், லீலாவதியின் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் செயினை பறிக்க முயன்றுள்ளார். அவர்களிடம் இருந்து நகையை காப்பாற்ற, நீலாவதி போராடியுள்ளார். இந்த போராட்டத்தில், நகையின் ஒரு பகுதி நீலாவதி கையில் சிக்கிக்கொண்டது. இருப்பினும், அந்த மர்ம நபர்கள், நீலாவதியின் செயினை பறித்துக் கொண்டு தப்பினர்.

தொடர்ந்து, அவரது ஒரு சக்கர வாகனத்தில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்த நீலாவதி காயமடைந்தார். பின்னர், அருகில் இருந்தவர்கள், அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுகுறித்த நீலாவதி அளித்த புகாரின் பேரில் பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர்களை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...