வ.உ.சி 150-வது பிறந்த நாளை முன்னிட்டு பா.ஜ.க சார்பில் பேச்சுப் போட்டி..!

வ.உ சிதம்பரனார் வரலாற்றைப் போற்றும் விதமாக ஐந்து தலைப்புகளின் கீழ், கல்லூரி இளநிலை மற்றும் முதுநிலை பயலும் மாணவ மாணவிகள் போட்டிகளில் கலந்துக் கொண்டனர்.


கோவை: பாரதிய ஜனதா கட்சி சார்பில் செக்கிழுத்த செம்மல் வ உ சிதம்பரனார் 150வது பிறந்த நாளை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டி நடைபெற்றது.

கோவை காந்திபுரம் ராம் நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற போட்டிகளில், கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலை பயலும் மாணவ மாணவிகள் கலந்துக் கொண்டனர். வ.உ சிதம்பரனார் வரலாற்றை அறிந்து கொள்ளும் விதமாக இந்த பேச்சு போட்டி நடத்தப்பட்டது.

செக்கிழுத்த செம்மல் வ.உ.சி, அந்நிய வணிகத்தைச் சுதேசி வணிகத்தால் அசைத்த வ.உ.சி, இன்றைய தற்சார்பு பாரதத்தின் தலைமகன் வ.உ.சி, ஆன்மீக தமிழறிஞர் மற்றும் தொழிலாளர்களின் தோழன் வ.உ. சிதம்பரனார் என்று ஐந்து தலைப்புகளின் கீழ் போட்டி நடைபெற்றது.



இதில், கலந்துகொண்டு முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு தலா 1,500 ரூபாய் வெகுமதியும், சான்றிதழும் வழங்கப்பட்டது. போட்டியில், நான்காம் இடம் பெற்ற மாணவருக்கு ஆயிரம் ரூபாயும், ஐந்தாம் இடம் பெற்ற மாணவருக்கு ரூபாய் 500 ரூபாயும், ஆறுதல் பரிசாக வழங்கப்பட்டது.



மேலும், போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவ மாணவியருக்குப் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

முதல் இரண்டு இடங்களைப் பெற்ற மாணவர்கள் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். மாநில அளவில் நடைபெறும் போட்டியில் முதல் பரிசாக ஒரு லட்சம் ரூபாய், இரண்டாம் பரிசாக 50 ஆயிரம், ரூபாய், மூன்றாம் பரிசாக 25 ஆயிரம் ரூபாய், அடுத்து வரும் 10 நபர்களுக்குச் சிறப்புப் பரிசாக தலா பத்தாயிரம் ரூபாயும் வழங்கப்படும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்த விழாவில், வ.உ. சிதம்பரனார் அவர்களின் எட்டாவது மகன் வாலேஸ்வரனின் மகள் மரகத மீனாட்சி ராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். சிறப்பு அழைப்பாளராகச் சைவ பெருமக்கள் பேரவை தலைவர் சண்முகம் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.

நிகழ்ச்சியில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னராஜ் வாழ்த்துரை வழங்கினார். இவ்விழாவில் நடுவர்களாக அண்ணாமலைநாதன், ஷாஜகான் மற்றும் மெய்ஸ்ரீ ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

பாரதிய ஜனதா கட்சியின் மாவட்டச் செயலாளர் மோகனா, கலைச்செல்வி, கல்வியாளர் பிரிவு மாவட்டச் செயலாளர் ஸ்ரீதேவி, தமிழ் வளர்ச்சி பிரிவு மாவட்ட தலைவர் அண்ணாமலை நாதன் மற்றும் பாலசுப்பிரமணி ஆகியோர் விழா ஏற்பாடு செய்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...