பூட்டிய வீடுகள் குறித்து தகவல் தெரிவிக்காத சரவணம்பட்டி, பீளமேடு போலீசாருக்கு நோட்டீஸ்...! ஆணையர் தீபக் தாமோர் நடவடிக்கை

சரவணம்பட்டி மற்றும் பீளமேடு பகுதியில் பகல் நேரங்களில் ரோந்து சென்றும், பூட்டிய வீடுகளை குறித்து தகவல் தெரிவிக்காத, 4 போலீசாருக்கு விளக்கம் கேட்டு, உயர் அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.


கோவை: கோவையில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் கொள்ளை, திருட்டு, வழிப்பறி, உள்ளிட்ட குற்றச் சம்பவங்களை தடுக்க மாநகர காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக, வீடுகளைப் பூட்டிவிட்டு வெளியூர் செல்பவர்கள், அவர்கள் எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையத்தில் தகவல் அளிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது போக, குற்றவாளிகளைப் பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாகப் பகல் மற்றும் இரவு நேரங்களில் ரோந்துப் பணியை தீவிரப்படுத்தி வருகின்றன.

கொள்ளைச் சம்பவங்களை கட்டுக்குள் கொண்டுவர, கோவை மாநகருக்கு உட்பட்ட 15 காவல் நிலைய எல்லைப் பகுதியில் ரோந்து பகுதிகளில் ஈடுபடும் போலீசாரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பகல் நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் மூன்று நாட்களுக்கு மேல் பூட்டி இருக்கும் வீடுகளைப் பார்த்தால், வீட்டின் முகவரி உள்ளிட்ட விவரங்களைச் சேகரித்து, காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆணையருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என காவல்துறை ஆணையர் தீபக் தாமோர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்நிலையில், சரவணம்பட்டி மற்றும் பீளமேடு பகுதியில் பகல் நேரங்களில் ரோந்து சென்றும், பூட்டிய வீடுகளை குறித்து தகவல் தெரிவிக்காத, 4 போலீசாருக்கு விளக்கம் கேட்டு, உயர் அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

சமீபத்தில், கோவையில் நடைபெற்ற 4-க்கும் மேற்பட்ட பெரிய கொள்ளை சம்பவங்களில் குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை.

Newsletter

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...