மோசடியில் ஈடுபட்ட 5 பேருக்கும் 55 லட்சம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி, பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க உத்தரவிட்டார்.
கோவை: ஈமு கோழி மோசடி வழக்கில் 5 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோவை டான்பிட் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார்.
திருப்பூர் மாவட்டம் கே. செட்டிபாளையத்தில் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (53), காவலன் காபி தோட்டம் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி (51), அங்கேரி பாளையத்தைச் சேர்ந்த பெருமாள்ராஜ் (54). அவிநாசி சென்னிமலை கவுண்டன் புதூர் அசோக்குமார் (33), ஆர்.கே. கவுண்டன்புதூரை சேர்ந்தவர் சரவணன் (47) ஆகிய 5 பேரும் சேர்ந்து காவலன் காப்பித் தோட்டம் பகுதியில் கடந்த 2012ம் ஆண்டு ஈமு கோழி வளர்ப்பு பண்ணையை தொடங்கினர்.
இவர்கள் பல்வேறு விதமான கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்தனர். இதை நம்பி 22 பேரிடம் 5 பேரும் சேர்ந்து, ரூபாய் 53 லட்சத்து 64 ஆயிரத்து 800 மோசடி செய்தது தெரிய வந்தது.
இது குறித்த வழக்கு கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர் நலன் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ரவி பொதுமக்களிடம் பலத்தைப் பெற்று மோசடி செய்த முத்துக்கிருஷ்ணன், கந்தசாமி, பெருமாள்ராஜ், அசோக்குமார், சரவணன் ஆகிய 5 பேருக்கும் தலா 10- ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
மேலும், அவர்களுக்கு தலா ரூபாய் 10 லட்சம் வீதம் ரூபாய் 55 லட்சம் அபராதம் விதித்தார். இதில் முத்துகிருஷ்ணன் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் அவருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் மாணிக்கராஜ் ஆஜராகி வாதாடினார். அபராத தொகை ரூபாய் 55 லட்சத்தை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.