வாக்குச்சாவடிக்கு 200 மீட்டர் தூரத்துக்குள் கூட்டமாக நிற்பதோ, வாக்காளர்கள் வாக்களிக்க வற்புறுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது. இதை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தார்.
கோவை: கோவை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு இன்று தொடங்கியது.
கோவை மாவட்டத்தில் காலியாக உள்ள மாவட்ட ஊராட்சி 3 -வது வார்டு கவுன்சிலர், ஆனைமலை திவான் ஷா புதூர், பொள்ளாச்சி தெற்கு தென் குமாரபாளையம், கிராம ஊராட்சி தலைவர்களின் பதவி, கிராம ஊராட்சி கவுன்சிலர் பதவிகளுக்கான பெள்ளாதி 3 -வது வார்டு, தேக்கம்பட்டி 15-ஆவது வார்டு, வெள்ளியங்காடு 10-வது வார்டு, நம்பர் 10 முத்தூர் 2-வது வார்டு சீரபாளையம், 4-வது வார்டு குருடம்பாளையம், 9-வது வார்டு ஜமீன் முத்தூர், 6-வது வார்டு கள்ளிப்பாளையம், 5-வது வார்டு போகம்பட்டி, 6-வது வார்டு மாதம்பட்டி, 3 -வது வார்டு உள்ளிட்ட 13 உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் இன்று நடக்கிறது.
இதில் மொத்தம் 51 பேர் போட்டியிடுகிறார்கள். 77 ஆயிரம் பேர் வாக்களிக்க உள்ளனர். இதற்காக மொத்தம் 128 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 27 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு வெப் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், காலை 7 மணியிலிருந்து மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கிறது. ஓட்டுப்பதிவு இருக்கத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வாக்குச் சாவடிகளில் சாமியானா பந்தல், குடிநீர், கழிப்பிட வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
மேலும், வாக்குச்சாவடிக்கு 200 மீட்டர் தூரத்துக்குள் கூட்டமாக நிற்பதோ வாக்காளர்கள் வாக்களிக்க வற்புறுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது. இதை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.