கோவையில் எஞ்சினியர் வீட்டின் கதவை உடைத்து 64-பவுன் நகை, ரூ.90-ஆயிரம் பணம் கொள்ளை.!!

எஞ்சினியர் வீட்டின் கதவை உடைத்து 64-பவுன் நகை, ரூ.90-ஆயிரம் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.


கோவை: எஞ்சினியர் வீட்டின் கதவை உடைத்து 64-பவுன் நகை, ரூ.90-ஆயிரம் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

கோவை பீளமேடு அருகே உள்ள சிவராம் நகரைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது-44), இவர் சிங்கப்பூரில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். கொரோனா பரவல் காரணமாகக் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கோவைக்குத் திரும்பி அவர் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

சுரேஷ் குடும்பத்துடன் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்குச் செல்ல திட்டமிட்டார். அதன்படி கடந்த 2-ஆம் தேதி வீட்டைப் பூட்டி விட்டு குடும்பத்துடன் திருவண்ணாமலைக்குப் புறப்பட்டார்.

அப்போது அவரது வீட்டின் முன் பக்க கதவை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே நுழைந்தனர். பின்னர் அறையிலிருந்த பீரோவைத் திறந்து அதிலிருந்த செயின், மோதிரம், கம்மல், கை செயின், வளையல், உட்பட 64-பவுன் தங்க நகைகளை மற்றும் 90-ஆயிரம் ரொக்கப் பணம் ஆகியவற்றைக் கொள்ளையடித்துத் தப்பிச் சென்றனர்.

சாமி தரிசனத்தை முடித்துக் கொண்டு இன்று காலை வீட்டிற்குத் திரும்பிய சுரேஷ் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அறையின் பீரோவிலிருந்த நகைகள் மற்றும் பணம் கொள்ளை போய் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து சுரேஷ் பீளமேடு போலீசில் தகவல் தெரிவித்தார்.

உடனடியாக இன்ஸ்பெக்டர் மீனாம்பிகை தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி மேலும் சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகியிருந்த கொள்ளையர்களின் கைரேகைகளைப் பதிவு செய்தனர்.

இதனை வைத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து என்ஜினீயர் வீட்டின் கதவை உடைத்து 64-பவுன் தங்க நகைகள் 90-ஆயிரம் ரொக்கப் பணம் ஆகியவற்றைக் கொள்ளையடித்துச் சென்ற கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர்.

மேலும் அந்த பகுதியில் உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் கொள்ளையர்களில் வந்து செல்லும் காட்சி பதிவாகி உள்ளதா என ஆய்வு செய்து வருகின்றனர்.

கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்ற என்ஜினீயர் வீட்டில் கொள்ளையர்கள் நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...