இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக காரில் பலூன்(Air bag) ஓபன் ஆனதால் லேசான காயங்களுடன் காருக்குள் இருந்தவர்கள் உயிர் தப்பினர்.
கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே தாமரைக்குளத்தில் லாரியின் பின்பக்கமாக கார் மோதிய விபத்தில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
கோவை பகுதியைச் சேர்ந்த நபர்கள் நேற்று இரவு பொள்ளாச்சி சென்றுவிட்டு காரில் கோவைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

தாமரைக்குளம் அருகே வந்து கொண்டிருக்கும் போது முன்னால் சென்று கொண்டிருந்த லாரி திடீரென பிரேக் அடித்ததால் பின்னால் வந்து கொண்டிருந்த கார் லாரியின் பின்பக்கமாக மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக கார் உள்ளேயிருந்த பலூன்(Airbag) ஓபன் ஆனதால் லேசான காயத்துடன் காருக்குள் இருந்தவர்கள் உயிர் தப்பினர்.
பின்னர், லாரி பின்புறம் சிக்கிய காரை கிரேன் மூலம் அப்புறப்படுத்தினர். இந்த விபத்து காரணமாக பொள்ளாச்சி - கோவை சாலையில் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
மேலும், இந்த விபத்து குறித்து கிணத்துக்கடவு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.