இவர் நிதி நிறுவன மோசடி வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சாதகமாக செயல்படாமல், நிதி நிறுவன உரிமையாளருக்குச் சாதகமாக செயல்பட்டதாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கோவை: கோவையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் கலையரசி. இவர் பேரூர் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளராக பணியாற்றி உள்ளார்.
இந்நிலையில், கோவை சரக டி.ஐ.ஜி முத்துசாமி கலையரசியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இது தொடர்பான உத்தரவு நகல் கலையரசிக்கு வழங்கப்பட்டது.
இதனையடுத்து, பணியிட நீக்க உத்தரவால் மன உளைச்சலில் காணப்பட்ட காவல் ஆய்வாளர் கலையரசி நேற்று மாலை மண்ணெண்ணெய் எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதனைத்தொடர்ந்து, குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் கலையரசியை காப்பாற்றினர். அதிர்ஷ்டவசமாக அவருக்கு காயம் ஏற்படவில்லை. பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பெண் ஆய்வாளரின் தற்கொலை முயற்சி கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து, ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.