விதிமீறலில் ஈடுபடுவோர் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோவை: கோவையில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்த மேலும் டாஸ்மாக் ஊழியர்கள் 2 பேர் சஸ்பென்ட் செய்யப்பட்டனர்.
கோவை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியருக்கு புகார் மனுக்கள் வந்தன.
இதையடுத்து, அவரது உத்தரவின் பேரில் கோவை வடக்கு மாவட்ட டாஸ்மாக் மேலாளர் பாபு நேற்று பல்வேறு கடைகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டார்.
அப்பொழுது, காந்திபுரம் பகுதியில் கடை எண் 1616-இல் பணியாற்றும் மேற்பார்வையாளர் சிவக்குமார் மற்றும் விற்பனையாளர் பாபு ஆகியோர் அதிகபட்ச சில்லரை விற்பனை விலையை விட கூடுதலாக 40 விலை நிர்ணயம் செய்து விற்றது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, இருவரையும் நேற்று அதிரடியாக சஸ்பெண்ட் செய்து வடக்கு மாவட்ட டாஸ்மாக் மேலாளர் பாபு உத்தரவிட்டார்.
இது பற்றி கோவை வடக்கு மாவட்ட டாஸ்மாக் மேலாளர் பாபு கூறுகையில்:-
விதி மீறலில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட்டு உள்ளது. எனவே அரசின் வழிகாட்டு விதிமுறைகளை சரியாக பின்பற்ற வேண்டும்.
புகார்களுக்கு ஆளாகக் கூடாது என டாஸ்மாக் ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இதையும் மீறி விதிமீறலில் ஈடுபடுவோர் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும் நடவடிக்கை தொடரும் என்று தெரிவித்தார்.