மாநகராட்சி இடத்தை அபகரித்து காலி செய்ய மறுத்த, வரதராஜபுரம் பகுதியைச் சேர்ந்த ஜீவானந்தம் உட்பட 4 பேர் மீது சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோவை: கோவையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்ற கிழக்கு மண்டல உதவி செயற்பொறியாளரிடம் தகராறில் ஈடுபட்டு தாக்க முயன்ற 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல உதவி செயற் பொறியாளராக பணியாற்றி வருபவர் புவனேஸ்வரி. இவர் நேற்று மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் போலீசாருடன் வரதராஜபுரம் இஎஸ்ஐ மருத்துவமனை அருகே ரோட்டோர ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்றார்.
அப்போது, மாநகராட்சி இடத்தை அபகரித்து காலி செய்ய மறுத்த, அதே பகுதியைச் சேர்ந்த ஜீவானந்தம் உட்பட 4 பேர் தகராறில் ஈடுபட்டனர். மாநகராட்சி ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்து தாக்குதல் நடத்த முயன்றனர்.
இது தொடர்பாக ஜீவானந்தம் உட்பட 4 பேர் மீது சிங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.