கோவை மாநகராட்சி மேற்கு மண்டல பகுதிகளில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ நேரில்‌ ஆய்வு.!

மருதமலை பிரதான சாலையில்‌ ஏற்படுத்தப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு குறித்து ஆணையாளர்‌ ஆய்வு செய்து, ஆக்கிரமிப்பு அகற்றுவது குறித்து நடவடிக்கையை அறிவுறுத்தினார்‌.


கோவை: கோயம்புத்தூர்‌ மாநகராட்சி மேற்கு/ மண்டல பகுதிகளில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா இன்று (07.10.2021) நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்‌.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி வடவள்ளியில்‌ மாநகராட்சி பேருந்து நிலையம்‌ அருகில்‌ வாரச்சந்தை அமைத்து சாலையின்‌ பெரும்பகுதியைப் பயன்படுத்தியதால்‌ போக்குவரத்திற்கு நெரிசல்‌ ஏற்பட்டுள்ளது என்று சாலை பாதுகாப்பு கூட்டத்தில்‌ வரப்பெற்ற கோரிக்கையினைத்‌ தொடர்ந்து, வாரச்சந்தை நடத்த மாற்று இடம்‌ அமைப்பதற்கு ஆணையாளர்‌‌ கள ஆய்வு மேற்கொண்டார்‌.



தொடர்ந்து, மருதமலை பிரதான சாலையில்‌ அமைந்துள்ள சிவாஞ்சலி மற்றும்‌ தனியார்‌ கேஸ்‌ சூடோன்‌ அருகில்‌ பிரதான சாலையை ஆக்கிரமிப்பு செய்துள்ளதால்‌, விபத்துகள்‌ ஏற்படுவதாகச் சாலைகள்‌ பாதுகாப்பு கூட்டத்தில்‌ வரப்பெற்ற கோரிக்கையினைத்‌ தொடர்ந்து, பிரதான சாலையில்‌ ஏற்படுத்தப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு குறித்து ஆணையாளர்‌ ஆய்வு செய்து, ஆக்கிரமிப்பு அகற்றுவது குறித்து நடவடிக்கையை அறிவுறுத்தினார்‌.



தொடர்ந்து மருதமலை பிரதான சாலையில்‌ வேளாண்‌ பல்கலைக்கழகம்‌ அருகில்‌ திட்ட சாலை விரிவாக்கம்‌ குறித்து ஆய்வு மேற்கொண்ட பின்னர், வார்டு எண்‌.14, வேலாண்டிபாளையம்‌ கோவில்‌ மேட்டில்‌ கழிவு நீர்‌ ஊருக்குள்‌ வருவதாக வந்த புகாரினைத்‌ தொடர்ந்து, அவ்விடத்தைப் பார்வையிட்ட ஆணையாளர்‌ வாய்க்காலைத் தூர்வாரி சுத்தப்படுத்திக் கழிவு சீராக செல்ல சரிசெய்திடுமாறு அலுவலர்களுக்கு

உதிரவிட்ட பின்னர்,



வடவள்ளி பேருந்து நிலையத்தில்‌ ஆய்வு மேற்கொண்டபின்‌, வார்டு எண்‌.24க்குட்பட்ட காந்தி பூங்காவில்‌ ஆய்வு மேற்கொண்டு,



பூங்கா வளாகத்திலுள்ள நீச்சல்‌ குளம்‌ மற்றும்‌ அருகிலுள்ள உடற்பயிற்சி கூடத்தை ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி ஆணையாளா மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்௧ரா பூங்காவின்‌ உட்புற பகுதி மற்றும்‌ வெளிப்புற பகுதிகளைத் தூய்மையாகப் பராமரிக்க வேண்டும்‌ என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்‌.

இந்த ஆய்வின்போது உதவி ஆணையாளர் சிவசுப்பிரமணியம்‌, நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளா்‌ மாதேஸ்வரன்‌, உதவி செயற்பொறியாளர்‌ ஹேமலதா, உதவி பொறியாளா்கள்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலார்கள்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...