காமராஜர் நகர்ப் பகுதியிலுள்ள சோதனையிட்ட போது ஒரு கிலோ 100-கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டு வீட்டின் உரிமையாளர் தாஸ் கைது செய்யப்ப்ட்டார்.
வால்பாறை: காமராஜர் நகர்ப் பகுதியிலுள்ள சோதனையிட்ட போது ஒரு கிலோ 100-கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டு வீட்டின் உரிமையாளர் தாஸ் கைது செய்யப்ப்ட்டார்.
கோவை மாவட்டம் வால்பாறையில் கஞ்சா விற்பவர்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுக்கும்படி கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் உத்தரவின் பேரில் வால்பாறை காவல் ஆய்வாளர் கற்பகம் தலைமையில் உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் மற்றும் காவல் துறையினரால் காமராஜ் நகர்ப் பகுதியில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
இந்நிலையில், காமராஜர் நகர்ப் பகுதியிலுள்ள தாஸ் என்பவர் வீட்டைச் சோதனையிட்ட போது ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது. வீட்டின் உரிமையாளர் தாஸ் வயது 50. ஏற்கனவே இவர் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் சிறையிலிருந்து வந்தார்.
தற்போது ஜாமீனில் வெளி வந்துள்ளார். இதைத்தொடர்ந்து வால்பாறை காவல் ஆய்வாளர் கற்பகம் உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் அடங்கிய காவல்துறையினர் அவரை வால்பாறை காவல் நிலையத்திற்குக் கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
வால்பாறை காவல்துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து வால்பாறை நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தினர். இதைத் தொடர்ந்து தாஸ் 15-நாள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.