கோவை தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் 3-ஆம் தேதி கூட்டத்தில் தீர்மானித்தபடி, கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகின்றது.
கோவை: கோவை தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

கோவை தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் 3-ஆம் தேதி கூட்டத்தில் தீர்மானித்தபடி, கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகின்றது.
கோரிக்கைகள்:-
2019-ஆம் ஆண்டு பணியேற்ற இளநிலை வருவாய் ஆய்வாளர் மற்றும் தட்டச்சர் ஆகியோரின் தகுதிக்கான பருவம் விளம்புகை சரியான நேரத்தில் உடனே வெளியிட வேண்டும். விரோத போக்கினை மேற்கொண்டு வரும் அலுவல மேலாளர் (பொது) அவர்களை, பணியாளர் மற்றும் நிர்வாகம் நலன் கருதிப் பணி இடம் மறுத்தல் செய்ய வேண்டும்.

மேலும், தலைமை மாவட்ட நிர்வாகிகளைப் பலிவாங்கும் நோக்கில் பணியிடை மாறுதலை ரத்து செய்யக் கோரியும், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது), முத்துராமலிங்கம் என்பவரின் விரோத போக்கினை கைவிட வேண்டும், போன்ற கோரிக்கைகளைமுன்வைத்தனர்.

மேலும், தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என்று தெரிவித்தனர்.