மாணவ, மாணவியர்களுக்கு பிளாஸ்டிக் கழிவுகளால் வன உயிரினங்களுக்கு ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக காடம்பாறை 19-வது வளைவு முதல் அட்டகட்டி வரை மினி மராத்தான் ஓட்டம் நடத்தப்பட்டது.
பொள்ளாச்சி: பொள்ளாச்சி கோட்டம், கள இயக்குநர் ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சி அறிவுரைப்படி மற்றும் துணை இயக்குநர், ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சி அவர்களின் வழிகாட்டுதலின் படி, வன உயிரின வாரவிழா நடைப்பெற்றது.

இதனை முன்னிட்டு, 07.10.2021-ம் தேதியன்று அட்டகட்டி வனஉயிரின மேலாண்மை பயிற்சி மையத்தில் அட்டகட்டி வன உயிரின மேலாண்மை பயிற்சி மையம் மற்றும் இயற்கை வரலாறு அறக்கட்டளை இணைந்து அரசு மேல்நிலைப்பள்ளி அட்டகட்டி மற்றும் அரசு உயர்நிலைப்பள்ளி - வாட்டர் பால்ஸ் ஆகிய இரு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு வனம்-வனவிலங்குகளின் முக்கியத்துவம் மற்றும் பிளாஸ்டிக் (நெகிழி) கழிவுகளால் வன உயிரினங்களுக்கு ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக காடம்பாறை 19-வது வளைவு முதல் அட்டகட்டி வரை மினி மராத்தான் ஓட்டம் நடத்தப்பட்டது.

பின்னர், வனங்கள் மற்றும் வன உயிரினங்கள் காக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து இயற்கை அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் வசந்தகுமார் மற்றும் இரு தலைமையாசிரியர்கள் விளக்கமாக எடுத்துக் கூறினர்.

இதில், கலந்து கொண்ட அனைத்து மாணவ-மாணவியருக்கும் சான்றிதழ்கள் மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டது. என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.