ஆனைமலை புலிகள்‌ காப்பகத்தில் வன உயிரின வார விழா: மினி மராத்தான்‌ ஓட்டம்‌.!!

மாணவ, மாணவியர்களுக்கு பிளாஸ்டிக்‌ கழிவுகளால்‌ வன உயிரினங்களுக்கு ஏற்படும்‌ தீமைகள்‌ குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும்‌ விதமாக காடம்பாறை 19-வது வளைவு முதல்‌ அட்டகட்டி வரை மினி மராத்தான்‌ ஓட்டம்‌ நடத்தப்பட்டது.


பொள்ளாச்சி‌: பொள்ளாச்சி‌ கோட்டம்‌, கள இயக்குநர் ஆனைமலை புலிகள்‌ காப்பகம்‌, பொள்ளாச்சி அறிவுரைப்படி மற்றும்‌ துணை இயக்குநர், ஆனைமலை புலிகள்‌ காப்பகம்‌, பொள்ளாச்சி அவர்களின்‌ வழிகாட்டுதலின்‌ படி, வன உயிரின வாரவிழா நடைப்பெற்றது.



இதனை முன்னிட்டு, 07.10.2021-ம்‌ தேதியன்று அட்டகட்டி வனஉயிரின மேலாண்மை பயிற்சி மையத்தில்‌ அட்டகட்டி வன உயிரின மேலாண்மை பயிற்சி மையம்‌ மற்றும்‌ இயற்கை வரலாறு அறக்கட்டளை இணைந்து அரசு மேல்நிலைப்பள்ளி அட்டகட்டி மற்றும்‌ அரசு உயர்நிலைப்பள்ளி - வாட்டர் பால்ஸ்‌ ஆகிய இரு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு வனம்‌-வனவிலங்குகளின்‌ முக்கியத்துவம்‌ மற்றும்‌ பிளாஸ்டிக்‌ (நெகிழி) கழிவுகளால்‌ வன உயிரினங்களுக்கு ஏற்படும்‌ தீமைகள்‌ குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும்‌ விதமாக காடம்பாறை 19-வது வளைவு முதல்‌ அட்டகட்டி வரை மினி மராத்தான்‌ ஓட்டம்‌ நடத்தப்பட்டது.



பின்னர்‌, வனங்கள்‌ மற்றும்‌ வன உயிரினங்கள்‌ காக்கப்பட வேண்டியதன்‌ அவசியம்‌ குறித்து இயற்கை அறக்கட்டளை நிறுவனர்‌ டாக்டர் வசந்தகுமார்‌ மற்றும்‌ இரு தலைமையாசிரியர்கள்‌ விளக்கமாக எடுத்துக்‌ கூறினர்‌.



இதில்,‌ கலந்து கொண்ட அனைத்து மாணவ-மாணவியருக்கும்‌ சான்றிதழ்கள்‌ மற்றும்‌ நினைவுப்‌ பரிசுகள்‌ வழங்கப்பட்டது. என்பதை அன்புடன்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...