வால்பாறையில் பொதுமக்களிடையே மேள தாளத்துடன் பாட்டு பாடி கள்ளச்சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம்..!!

கள்ளச்சாராயத்திற்கு எதிரான இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் வால்பாறை காந்திசிலை வளாக பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் முன்பு பொதுமக்கள் கூடும் இடங்களில் நடைபெற்றது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் பொதுமக்களிடையே மேள தாளத்துடன் பாட்டு பாடி கள்ளச்சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் வயது வரம்பின்றி அனைத்து வகையான ஆண்கள் மற்றும் பெண்கள் மது பழக்கத்திற்கு அடிமையாகும் அவல நிலை உருவாகி உள்ளது. மதுபானம் கிடைக்காத பட்சத்தில் சில இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சி சிலர் விற்பனை செய்து வருகின்றனர்.

இதை கண்காணிக்க மதுவிலக்கு துறையை உருவாக்கி விற்பனையில் ஈடுபடுபவர்களை கண்காணித்து வருகின்றனர். இருப்பினும், கள்ளச்சாராய விற்பனையை இன்னும் பல இடங்களில் தடுக்க முடியாத நிலை உருவாகி உள்ளது.



எனவே, இந்த நிலையை மாற்றும் நோக்கத்தோடு கோவை மாவட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை இணைத்து மதுபானம் மற்றும் கள்ளச்சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் வால்பாறை காந்திசிலை வளாக பேருந்து நிலையம். புதிய பேருந்து நிலையம் முன்பு பொதுமக்கள் கூடும் இடங்களில் நடந்தது.

இதில் மதுபானம் மற்றும் கள்ளச்சாராயம் குடிப்பதன் மூலம் ஏற்படும் தீமைகள் குறித்து மேள தாலங்களுடன் பாடல் பாடி ஆடல் பாடலுடன் விழிப்புணர்வு வாசகம் உள்ளடக்கிய துண்டு பிரசுரங்களை அங்கு கூடியிருந்த பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Newsletter

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...