வீட்டுமனை பட்டா வழங்கியதில் முறைகேடு: கோவை மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம்.!!

உரிய பயனாளிகளுக்குப் பட்டா வழங்காமல் முறைகேடாகப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறி காரமடை பொதுமக்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர்.


கோவை: உரிய பயனாளிகளுக்குப் பட்டா வழங்காமல் முறைகேடாகப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறி காரமடை பொதுமக்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை அம்பேத்கர் நகர், எத்தபன் நகர் இரண்டிற்கும் எட்டு மாதங்களுக்கு முன்பு ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் 91-பயனாளிகளுக்கு இலவச வீட்டுப் பட்டா வழங்கப்பட்டது.

பட்டா பெற்ற நாளிலிருந்து 6-மாதங்களுக்குள் வீடுகள் அமைத்திட நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. மேற்படி எந்தவித அடிப்படைகளும் இல்லாமல் மக்கள் அங்கு வாழ்ந்து வருவதாகவும். தனிநபர் ஒருவர் பட்டாக்களில் முறைகேடு செய்வதாகக் குற்றம்சாட்டிய அவர்கள், 2002 ஆம் ஆண்டு வீட்டு மனை பட்டாவினை ஆதிதிராவிடர் நலத்துறை வழங்கியுள்ளது.

மேலும் வீடுமனைப் பெற்றவர்கள் அங்கு 20 ஆண்டுகளுக்கு மேலாகியும் அங்கு குடியேறாததால் வீட்டு மனை பாட்ட ரத்து செய்யப்பட்டதாகவும், அவிடங்களின் பட்டாக்களை மனுகாரர்களுக்கு கூடுத்ததாகவும் அந்த இடத்தை மீண்டும் முந்தைய பயனாளிகளுக்கே கொடுப்பதாகக் கூறி பன்னீர்செல்வம் என்ற தனிநபர் பணம் பெற்றுக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

அந்த இடத்திலிருந்து, மக்களை துரத்தும் எண்ணத்தோடு அவர்களை மிரட்டியதாகக் கூறுகின்றனர். இது குறித்து போலிஸாரிடம் புகார் அப்பகுதி மக்கள் புகார் அழித்துள்ளனர். இதனை விசாரித்த காவல்துறை, பன்னீர்செல்வம், சோமசுந்தரம், துரை மற்றும் ரமேஷ் ஆகியோரை அப்பகுதிக்கு வரக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இவ்வாறு பிரச்சனைகள் நடந்துகொண்டு இருக்கும் வேளையில், மாவட்ட ஆட்சியரிடம் மனுக்களைத் தொடர்ந்து பொதுமக்கள் மனுக்களை அழித்து வந்ததாகக் கூறப்படுகிறது.



தீர்வு இல்லாத காரணத்தால் தங்கள் வழ்வாதரமே பாதிக்கப்படுகின்றது என்று கூறிய அவர்கள், தீடிர் என்று தர்ணாவில் ஈடுப்பட்டனர்.



மேலும், சாலைகளை மறித்து அவர்கள் அமர்ந்ததால் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சிக்கும், கோவை மாவட்ட ஆட்சியரின் சிறந்த பணிக்கும் அவப்பெயர் ஏற்படுத்தும் வண்ணம் உள்ளது. திமுக பிரமுகர் என்று தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் பன்னீர்செல்வத்தின் செயல்கள் என்று கூறினார்கள்.

Newsletter

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...