மண் எடுக்கப்பட்டதால் ஏற்பட்ட பெரும் பள்ளங்கள்: கோவையில் சமூக ஆர்வலர்கள் கண்டனம்.!!

தடாகம் பகுதியில், அளவுக்கு அதிகமாக மண் எடுக்கப்பட்டதால் ஏற்பட்ட பெரும் பள்ளங்கள் சமன் செய்யும் பணிக்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.



கோவை: தடாகம் பகுதியில், அளவுக்கு அதிகமாக மண் எடுக்கப்பட்டதால் ஏற்பட்ட பெரும் பள்ளங்கள் சமன் செய்யும் பணிக்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

கோவை மாவட்டம் தடாகம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் இயங்கி வந்த நிலையில் கனிம வளங்களை அதிகமாகப் சுரண்டப்படுவதாக புகார்கள் எழுந்தது.

இதனால் செங்கல் சூளைகள் இயங்கவும் அப்பகுதியில் மண் எடுக்கவும் உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மண் பாண்டங்கள் செய்வதற்காக குறிப்பிட்ட அளவு மண் எடுக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில், கோவை தடாகம் அடுத்துள்ள மாங்கரை பகுதியில் செங்கல் சூளைகள் இயங்கி வந்த போது அளவுக்கு அதிகமாக மண் எடுக்கப்பட்டதால் பெரும் பள்ளங்கள் உருவாகி இருந்ததை தற்போது சமன்செய்யும் பணியை செங்கள் சூளை நிருவனங்கள் செய்து வருகின்றன.



இயந்திரங்களை கொண்டு பெரும் குழியான பகுதிகள் சமன்செய்யபடும் வீடியோ வெளியான நிலையில் சமூக ஆர்வலர்கள் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதுபோன்று சமன் செய்யப்பட்டு விட்டால் அதிகாரிகள் யாரேனும் வரும் போது அளவிற்கு அதிகமாக மண் எடுக்கப்பட்டதும் கனிம வள கொள்ளை நடைபெற்றது. மறைக்கப்படும் எனவும், உடனடியாக மாவட்ட நிர்வாகம் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...