அரசு நிகழ்ச்சி என்றால் திமுகவினர் வருவீர்களா? தொலைத்து விடுவேன் என அதிமுக எம்எல்ஏக்கள், திமுகவினரை ஒருமையில் மிரட்டியதாக கூறப்படுகிறது.
கோவை: கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் அரசு மருத்துவமனை அரசு நிகழ்ச்சிக்கு வந்த திமுகவினருக்கு அதிமுக எம்எல்ஏக்களால் மிரட்டல் விடுத்து தகராறில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை பெரியநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனையில் அரசு சார்பில் ஆக்சிஜன் கொள்கலன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு திமுகவை சேர்ந்த மாவட்ட கவுன்சிலர் கார்த்திக் மற்றும் திமுக ஒன்றிய செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பலரும் கலந்து கொள்ள சென்றுள்ளனர்.
இந்த நிகழ்ச்சிக்கு, அதிமுக எம்எல்ஏக்கள் பிஆர்ஜி அருண்குமார், ஏகே.செல்வராஜ் உள்ளிட்ட அதிமுகவினரும் வந்திருந்தனர். அப்போது, திமுகவினரை தடுத்து நிறுத்தி அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, இருதரப்பினருக்கும் இடையே தகராறு முற்றி, அது கைகலப்பாக மாறும் சூழல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் ஒருமையில் பேசிக்கொண்டனர்.
அரசு நிகழ்ச்சி என்றால் திமுகவினர் வருவீர்களா? தொலைத்து விடுவேன் என அதிமுக எம்எல்ஏக்கள், திமுகவினரை ஒருமையில் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
மேலும், பெரியநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனை மருத்துவர் சேரலாதன் ஒருதலைபட்சமாக நடந்து கொண்டு, திமுகவினரை அவமதித்ததாகவும், இதுதொடர்பாக அதிகாரிகளிடத்தில் புகார் அளிக்க உள்ளதாக திமுகவினர் தெரிவித்தனர்.