பொள்ளாச்சி திவான்சாபுதூரில் ஊராட்சி மன்ற தலைவர் இடை தேர்தலுக்காக ஆலங்கடவு பகுதியில் திமுகவினர் இறுதிக்கட்ட தீவிர வாக்கு சேகரிப்பு..!

சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் திமுக கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு வருவதை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் திமுகவிற்கு பொதுமக்கள் ஆதரவு அதிகரித்துள்ளதாக தெரிவித்தனர்.


கோவை: பொள்ளாச்சி அடுத்த திவான்சாபுதூரில் ஊராட்சி மன்ற தலைவர் இடை தேர்தலுக்காக ஆலங்கடவு பகுதியில் திமுகவினர் இறுதிக்கட்ட தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட திவான்சாபுதூரில், ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான இடைத்தேர்தல் வரும் 9ம் தேதி நடக்க உள்ளது. இதில் திமுக சார்பில் கலைவாணி சிலம்பரசன் போட்டியிடுகிறார்.

இந்நிலையில், இவருக்கு ஆதரவு தெரிவித்து, திமுக மாநில நெசவாளர் அணி செயலாளர் நாகராஜன் தலைமையில், மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர் மு.க.முத்து உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஆலங்கடவு பகுதியில் வீதி வீதியாக சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.



சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் திமுக கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு வருவதை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் திமுகவிற்கு பொதுமக்கள் ஆதரவு அதிகரித்துள்ளதாகவும், பத்தாண்டுகளாக கிராமப்புறங்களில் மக்களுக்கு நிறைவேற்றப்படாத அடிப்படை வசதிகளை செய்து கொடுப்போம் என்று வாக்குறுதி அளித்து இடைத்தேர்தலில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருவதாகவும், அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்றும் திமுகவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...