கோவை: கொரொனா பரவலை தடுக்கும் பொருட்டு, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, வார இறுதி நாட்களில் பிரசித்தி பெற்ற கோவில்களில் மக்கள் அதிகம் கூடும் வாய்ப்பு உள்ளதால், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில், குறிப்பிட்ட கோவில்களில் பக்தர்களுக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், விஷேச நாட்களிலும் கோவில்களில் பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், அனைத்து நாட்களிலும் கோவில்களை திறக்க வலியுறுத்தி, கோவை தண்டு மாரியம்மன் கோவில் அருகில் 200க்கும் மேற்ப்பட்ட பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பெண்கள் தீச்சட்டி ஏந்தியும், குளவை போட்டும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், டாஸ்மாக் திறக்க அனுமதி, பள்ளிகள் திறக்க அனுமதி, ஆனால் கோவில்களை திறக்க மட்டும் தடையா..? என்ற பாதாகைகளை ஏந்தியவாறு, முழக்கங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக, மேடை அமைத்து காளி நடனம் போன்ற நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது.