பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை சிறுமியர் மற்றும் சிறுவர் மன்றத்தில் சேர்க்க தங்களுக்கு அருகில் உள்ள காவல் நிலையத்தை அணுகி விண்ணப்பம் பெற்று அவர்களது குழந்தைகளை இணைத்து கொள்ளலாம்.
கோவை: கோவை மாவட்ட எஸ்.பி. அலுவலக கூட்டரங்கில் குழந்தைகள் நல்வழிப்படுத்துதல் விழிப்புணர்வு கூட்டம் எஸ்.பி. செல்வ நாகரத்தினம் தலைமையில் நடைபெற்றது.
கோவை மாவட்ட காவல் நிலைய பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளை நல்வழிப் படுத்துவதற்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் அவர்களால் தொடங்கப்பட உள்ள "துளிர்" என்ற திட்ட முன்னோட்டத்தின் பேரில் இளம் சிறார்களை நல்வழிப்படுத்தி அவர்கள் வாழ்க்கையை சீர்திருத்தம் செய்ய முயற்சிகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
அதேபோல், கோவை மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம், துடியலூர், பெரியநாயக்கன்பாளையம், பேரூர், வடவள்ளி, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி கிழக்கு, பொள்ளாச்சி மேற்கு, ஆனைமலை மற்றும் சூலூர் ஆகிய பத்து காவல் நிலைய பகுதிகளில் செயல்பட்டு வந்த சிறுவர் மற்றும் சிறுமியர் மன்றம் (Police Boys and Girls Club) கொரோனா காலகட்டத்தின் காரணமாக செயல்படாமல் இருந்தது.
மேற்படி சிறுவர் மற்றும் சிறுமியர் மன்றத்தினை மீண்டும் சிறந்த முறையில் செயல்படுத்தும் விதமாக மாவட்ட காவல் அலுவலகத்தில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் அவர்களால் சிறுவர் மற்றும் சிறுமியர் மன்றம் செயல்படும் பகுதிகளில் உள்ள காவல் நிலையத்தைச் சேர்ந்த உதவி ஆய்வாளர்கள், Boys Club-Scout Masters and Girls Club-Care Takers ஆகியோர்களுக்கு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கூறியதாவது,
பொதுமக்கள் அவர்களின் குழந்தைகளை மேற்படி சிறுமியர் மற்றும் சிறுவர் மன்றத்தில் சேர்க்க தங்களுக்கு அருகில் உள்ள காவல் நிலையத்தை அணுகி விண்ணப்பம் பெற்று அவர்களது குழந்தைகளை இணைத்துக்கொள்ளலாம்.
இம்மன்றத்தில் அவர்களது குழந்தைகளை சேர்ப்பதன் மூலம் அரசு மற்றும் காவல் துறையால் வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் கிடைக்க வழிவகை செய்யப்படும் எனவும், குழந்தைகளுக்கு அவர்களை சுற்றி நடக்கும் நன்மை, தீமைகளை பற்றி எடுத்துக்கூறி அவர்கள் செல்ல வேண்டிய பாதையினை பற்றியும் அதனால் அவர்களுக்கு வாழ்வில் கிடைக்கும் பலன் பற்றியும் குழந்தைகளிடையே எடுத்துக்கூற வேண்டும் என்றார்.
மேலும், எண்ணுவது உயர்வாக எண்ணல் வேண்டும் என்பதை குழந்தைகளுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்றும், குழந்தைகளுக்கு கல்வி மற்றும் முக்கியமல்ல வாழ்வில் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் பல உள்ளன என்பதை உணர்த்துவது பற்றியும் கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் எடுத்துக்கூறி அறிவுரை வழங்கினார்.