இன்று பிடிப்படுமா T23 புலி..? மசினகுடி வனப்பகுதியில் புலியை பிடிக்கும் பணி இன்று 13வது நாளாக துவங்கியது..!

சிங்காரா பகுதியில் இருந்து வேறு பகுதிக்கு அந்த ஆண் புலி சென்றுவிட்டதா? வனப்பகுதிக்குள் பொருத்தப்பட்டுள்ள 85 கண்காணிப்பு கேமராக்களையும், வனத்துறையினர் ஆய்வு.


நீலகிரி: நீலகிரி மாவட்டம், மசினகுடி சிங்காரா வனப்பகுதியில் T23 புலியை பிடிக்கும் பணி இன்று 13வது நாளாக துவங்கியது. இன்று காலை, தொடங்கப்பட்ட T23 புலியை பிடிக்கும் ஆப்ரேஷனானது வனப்பகுதிக்குள் நான்கு இடங்களில் அமைக்கப்பட்ட மரன்களின் மீது கால்நடை மருத்துவர்கள் அமர்ந்து புலியை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.



நேற்றைய தினம் முழுவதும், புலி வனத்துறையினரின் கண்களுக்கு தென்படாத நிலையில், சிங்காரா பகுதியில் இருந்து வேறு பகுதிக்கு அந்த ஆண் புலி சென்றுவிட்டதா? என்ற கோணத்தில் ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது. அதன்படி, வனப்பகுதிக்குள் பொருத்தப்பட்டுள்ள 85 கண்காணிப்பு கேமராக்களையும், இன்று வனத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், தொடர்ந்து இன்றும் வனப்பகுதிக்குள் அமைக்கப்பட்டுள்ள 4 மரண்கள் மீது அமர்ந்து மயக்க ஊசி செலுத்த மருத்துவ குழு தயாராக நிலையில் உள்ளது.



13 நாட்களாக T 23 புலியை பிடிக்க வனத்துறையினர் தீவிரம் காட்டி வரும் நிலையில், தமிழக தலைமை வன உயிரின பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ் அறிவியல் ரீதியாக புலியை பிடிப்பதற்கான பணிகள் நடந்து வருவதாக தெரிவித்துள்ளார். இன்று அதிகாலை முதல், அடுத்தடுத்து நான்கு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள பரணில், அந்தந்த குழுக்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபடும், என அவர் தெரிவித்துள்ளார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...