கோவையில் கால் டாக்சி டிரைவரை விபசாரத்திற்கு அழைத்த புரோக்கர்கள் இருவர் கைது..!

விபச்சாரம் நடத்திய புரோக்கர்கள் இருவரையும் கைது செய்த போலீசார், மூன்று பெண்களையும் மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.


கோவை: கோவையில் கால் டாக்சி டிரைவரை விபசாரத்திற்கு அழைத்த புரோக்கர்கள் இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

கோவை பாப்பநாயக்கன் பாளையம் பகுதியைச் சேர்ந்த பாண்டி என்பவரின் மகன் ஜெயபிரகாஷ் (36). கால் டாக்சி டிரைவரான இவர் நேற்று மதியம் நஞ்சுண்டாபுரம் பகுதியில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு வந்த முதியவர் ஒருவர் தங்களிடம் அழகிய இளம்பெண்கள் இருப்பதாகவும் பணம் கொடுத்தால் அவர்களுடன் ஜாலியாக இருக்கலாம் என்றும் கூறியிருக்கிறார். இதையடுத்து ஜெயப்பிரகாஷ் பணம் எடுத்து விட்டு வருகிறேன் என்று கூறிவிட்டு கோவை ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பெயரில் சப் இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான போலீசார் ஜெயபிரகாஷ் கூறிய இடத்திற்கு சென்றனர். அப்போது, அங்கு அவர்கள் நின்று கொண்டிருந்தனர். தொடர்ந்து அவர்களை பிடித்து நடத்திய விசாரணையில் அதே பகுதியில் நின்று கொண்டிருந்த மூன்று இளம் பெண்களையும் அவர்கள் விபச்சாரத்திற்காக ஈடுபடுத்தி வருவது தெரிய வந்தது.

தொடர்ந்து அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து நடத்திய விசாரணையில் தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரின் மகன் பழனியப்பன் (55 ) மற்றும் திருவாரூர் மாவட்டம் திருமங்கலம் பகுதியை சேர்ந்த ராமன் என்பவரின் மகன் துரை (39) ஆகிய இருவரும் புரோக்கர்களாக செயல்பட்டு இளம்பெண்களை வைத்து விபசாரம் நடத்தியது தெரிய வந்தது.

மேலும், விபச்சாரத்திற்காக அழைத்துவரப்பட்டு இருந்த மதுரை மேலூரை சேர்ந்த 27 வயது பெண், மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த 24 வயது பெண் மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த 25 வயது பெண் ஆகிய மூன்று பெண்களையும் மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபச்சாரம் நடத்திய புரோக்கர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...