கோவையில் தூய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்..!

இந்த இயக்கத்தின் படி ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மருத்துவ குணம் கொண்ட மரக்கன்றுகள் நடவு செய்யப்படுகின்றன.


கோவை: கோவையில் தூய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை மாவட்ட ஆட்சியர் சமீரன் துவக்கி வைத்தார்.

மத்திய அரசால் துவங்கப்பட்ட தூய்மை இந்தியா திட்டம் நாடு முழுவதும் வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், அது குறித்து கிராம புறங்களிலும், நகர் புறங்களிலும் உள்ள மக்களுக்கு விழிப்புணர்வை மேலும் ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.



அதன் ஒரு பகுதியாக, இன்று கோவையில் இது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உறுதி மொழி எடுக்கப்பட்டது.



கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் உறுதிமொழியை முன்மொழிய, அரசு ஊழியர்கள் பின் மொழிந்தனர்.



மத்திய அரசின் மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பில் கோவை மாவட்டத்தில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, தூய்மை பாரத கையெழுத்து இயக்கத்தை கோவையில் மாவட்ட ஆட்சியர் இன்று துவக்கி வைத்தார்.

இந்த இயக்கத்தின் படி, கோவை மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம், காவல்துறை, தனியார் கல்லூரி மாணவர்கள் இணைந்து தூய்மை பணிகளை மேற்கொள்கின்றனர்.

மேலும் ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மருத்துவ குணம் கொண்ட மரக்கன்றுகள் நடவு செய்யப்படுகின்றன.



இந்நிகழ்வில் கோவை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா, பயிற்சி ஆட்சியர் சரண்யா ராமசந்திரன் உட்பட 50க்கும் மேற்பட்ட அரசு பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...