ரூ.46.49 கோடி ரூபாய் வரி பாக்கி... கோவையில் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் வெளிவந்த உண்மை.!!

கோவை மாநகராட்சி பகுதிகளில் தனிநபர்களால் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் கட்டிட வரி மற்றும் காலியிட வரி பாக்கி வைத்துள்ளது குறித்து ஆர் டி ஐ., மூலம் கிடைத்த தகவல்.


கோவை: கோவை மாநகராட்சி பகுதிகளில் தனிநபர்களால் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் கட்டிட வரி மற்றும் காலியிட வரி பாக்கி வைத்துள்ளது குறித்து ஆர் டி ஐ., மூலம் தகவல் கிடைத்துள்ளது.

கோவையைச் சேர்ந்த தியாகராஜன் என்ற சமூக ஆர்வலர் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கோவை மாநகராட்சி பகுதிகளில் தனிநபர்களால் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மாநகராட்சிக்குச் செலுத்த வேண்டிய கட்டிட வரி மற்றும் காலி இடம் வரி பாக்கி தொகை செலுத்தப்படாமல் உள்ள 100 நபர்கள் குறித்த விவரங்களைக் கோரி மனு சமர்ப்பித்திருந்தார்.

பல நாட்களுக்குப் பிறகு அந்தத் தகவலை மாநகராட்சி நிர்வாகம் வழங்கியுள்ளது. அதில் கட்டிட வரி ஒரு கோடி ரூபாய்க்கு மேல் பாக்கி வைத்துள்ள நபர்கள் குறித்த பட்டியலில் 17 நிறுவனங்களின் பெயர்கள் வெளியிடப்பட்டு மொத்தம் 42,30,89,827 ரூபாய் என்றும் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் காலியிட வரி பாக்கி வைத்துள்ளவர்கள் முதல் 100 பேர் பட்டியலில் 3 தனிநபர்களின் விபரங்கள் வழங்கப்பட்டு மொத்தம் 4,18,30,836 ரூபாய் நிலுவை வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 46.49 கோடி ரூபாய் வரி பாக்கி உள்ளது தெரிய வந்துள்ளது. சமூக ஆர்வலர் தியாகராஜன் கூறுகையில்,"தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கோவை மாநகராட்சி பகுதிகளில் தனிநபர்களால் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மாநகராட்சிக்குச் செலுத்த வேண்டிய கட்டிட வரி மற்றும் காலி இடம் வரி பாக்கி தொகை செலுத்தப்படாமல் உள்ள 100 நபர்கள் குறித்த விவரங்களைக் கோரி மனு சமர்ப்பித்து இருந்தேன்.

கோவை மாநகராட்சி பொது தகவல் அலுவலர்/உதவி கமிஷனர்(வருவாய்) அண்ணாதுரை அவர்களால் 30 நாட்களுக்குள் தகவல் வழங்கப்படவில்லை. மேல்முறையீட்டு அலுவலர் முன்னால் துணை கமிஷனர் விமல் ராஜன் அவர்களால் 45 நாட்கள் ஆகியும் தகவல் வழங்கப்படவில்லை. 90 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள துணை கமிஷனர் அவர்களால் பதவி ஏற்ற மூன்றாவது நாளில் எனக்குத் தகவல் கிடைத்தது." என்றார்.









Newsletter

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...