சென்னையில் டாஸ்மாக் கடை ஒன்றில் புகுந்து ஊழியர்களை வெட்டியவர்களை கைது செய்ய வலியுறுத்தி கோவை பீளமேடு பகுதியில் மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு டாஸ்மாக் ஊழியர்கள் கடையடைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவை: டாஸ்மாக் கடை ஊழியர்களை வெட்டியவர்களை கைது செய்ய வலியுறுத்தி கோவை பீளமேடு பகுதியில் மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு டாஸ்மாக் ஊழியர்கள் கடையடைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சென்னையில் உள்ள டாஸ்மாக் கடை ஒன்றில் புகுந்த மர்ம நபர்கள் அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த இருவரை அரிவாளால் சரமாரியாக வெட்டியதில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவத்தைக் கண்டித்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் டாஸ்மாக் ஊழியர்கள் கடை அடைப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் ஒரு பகுதியாகக் கோவை பீளமேடு பகுதியில் மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு சம்பவத்தில் ஈட்டுப்பட்ட மர்ம நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
200க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடை ஊழியர்கள் கடைகளை அடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தாக்குதல் நடத்திய நபர்களை உடனடியாக கைது செய்து கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு அரசு உரியப் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் அப்போது முழக்கங்களை எழுப்பினர்.