கோவையில் 9-வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. முதியவர் போக்சோவில் கைது.!!

கோவை துடியலூர் அருகே விளையாடிக்கொண்டிருந்த 9-வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.


கோவை: கோவை துடியலூர் அருகே விளையாடிக்கொண்டிருந்த 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

கோவை துடியலூர் அருகே உள்ள பெரிய மத்தம் பாளையத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி. இவருக்கு 9-வயதில் ஒரு மகள் உள்ளார்.

இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது கொரோனா காரணமாகப் பள்ளிகள் மூடப்பட்டு உள்ளதால் சிறுமி வீட்டிலிருந்தபடி பாடம் படித்து வந்தார்.

நேற்று முன்தினம் சிறுமியின் பெற்றோர் வேலைக்குப் புறப்பட்டுச் சென்றனர். அப்போது சிறுமியின் தாய் தனது மகளை அந்த பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் விட்டுச் சென்றார்.

சிறுமி தனது பாட்டி வீட்டின் முன்பு நின்று விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த ரங்கசாமி வயது 60, கூலித்தொழிலாளி.

கையை பிடித்து இழுத்து மறைவான பகுதிக்கு அழைத்துச் சென்றார். அங்கு வைத்து அவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதில் அதிர்ச்சி அடைந்த சிறுமி சத்தம் போட்டார்.

உடனடியாக ரங்கசாமி சிறுமியை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். தனது பெற்றோர் வேலை முடிந்து திரும்பியதும் நடந்த சம்பவங்களைச் சிறுமி அவர்களிடம் அழுதபடியே கூறினார்.

இதில் அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுகுறித்து துடியலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலித்தொழிலாளி ரங்கசாமியைக் கைது செய்தனர்.

அவர் மீது போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் ரங்கசாமியை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி இன்று சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...