உ.பியில் பிரியாகாந்தி கைது செய்யப்பட்டதிற்கு எதிராக திருப்பூரில் ஆர்ப்பாட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சியினர்!

உத்தரப்பிரதேசத்தில் ஏற்பட்ட வன்முறையால் விவசாயிகள் பலர் உயிரிழ்ந்த நிலையில், அவர்களின் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்கச்சென்ற பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டார். எனவே இதற்கு எதிர்ப்புத்தெரிவிக்கும் விதமாக திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் இன்று ஆர்ப்பாட்டத்தில் நடைபெற்றது.


திருப்பூர்: உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகளின் மீது காரை ஏற்றிக்கொன்ற அமைச்சரின் மகனுக்கு எதிராகவும், மத்திய அரசிற்கு எதிராகவும் விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் அங்கு வன்முறை வெடித்தது.

இதில் 8 விவசாயிகள் உயிரிழ்ந்ததாகக்கூறப்பட்டு வரும் நிலையில், அம்மாநில அரசு இதனை மறுத்து வருகிறது. இந்நிலையில் தான் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களை நேரில் சந்தித்து, ஆறுதல் தெரிவிப்பதற்காகக் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பிரியங்கா காந்தி நேற்று சென்றிருந்தார். ஆனால் பன்வீர்பூர் கிராமத்திற்கு உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தியதோடு போலீசார் பிரியங்காகாந்தியை கைது செய்தனர்.



இந்நிலையில் இந்த கைதுக்கு எதிர்ப்புத்தெரிவிக்கும் விதமாகவும், விவசாயிகளின் போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியக் காவல்துறை மற்றும் பா.ஜ.க அரசைக்கண்டித்து இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியே காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இதில் மத்திய மற்றும் உத்தரப்பிரதேச மாநில அரசுக்கு எதிராகக் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Newsletter

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...