கலைஞர் கருணாநிதி, மு.க ஸ்டாலின் வேடமணிந்து பொள்ளாச்சியில் வாக்குச்சேகரிப்பு; தந்ரூபமாக இருந்தது என மக்கள் ஆச்சரியம்!

பொள்ளாச்சி அருகே கிராம ஊராட்சிமன்றத்தலைவர் பதவிக்கு வாக்குச்சேகரிப்பின் போது, திடீரென மு.கருணாநிதி, மு.க ஸ்டாலின் வேடமணிந்து வந்த நபர்களை மக்கள் ஆச்சரியத்துடன் வரவேற்றனர்.


கோவை: கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியையடுத்த திவான்சாபுதூர் ஊராட்சிமன்றத் தலைவர் பதிவிக்கான தேர்தல் வருகின்ற அக்டோபர் 9 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதற்காக தற்போது தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., உள்ளிட்ட பிறக்கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் பொதுமக்கள் மத்தியில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தான் நேற்று திவான்சாபுதூர் கிராமத்தில் மழை அதிகளவில் பெய்ததால் தனியார் மண்டபத்தில் வாக்கு சேகரிப்பு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் பழனிசாமி வேட்பாளர் கலைவாணியை ஆதரித்து அங்கு வந்திருந்த பொதுமக்களிடம் வாக்குகளைச் சேகரித்தார்.



அப்போது யாரும் சற்றும் எதிர்ப்பார்க்காத நேரத்தில், இந்த நிகழ்வில் திடீரென கலைஞர் கருணாநிதி மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் போன்று வேடமணிந்த இருவர் கூட்டத்திற்கு நடுவே நுழைந்ததும் அங்கு கூடியிருந்த பொதுமக்கள் ஆச்சரியத்துடன் இருவரையும் பார்த்தனர்.



தத்ரூபமாக இருப்பதாக தெரிவித்த பொதுமக்கள் அவர்களுடன் சேர்ந்து புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர்.



பின்னர் கூட்டத்தின் முடிவில் முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் கலைஞர் கருணாநிதி வேடம் அணிந்திருந்த இருவரும் அங்கிருந்த பொதுமக்களை வணங்கி ஊராட்சி தலைவர் பதவிக்கு தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கலைவாணியை ஆதரித்து வாக்குச் சேகரிப்பிலும் ஈடுபட்டனர்.

Newsletter

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...