கோவையில் கொசுக்கள் உற்பத்தியாவதைத் தடுக்க 600 களப்பணியாளர்கள் நியமனம்..!

மேலும், கொசுக்கள் உற்பத்தியாக காரணமாக உள்ளவர்களுக்கு அபராதம் விதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: கோவை மாநகராட்சியில் கொசுக்கள் உற்பத்தியாவதைத் தடுக்க 600 களப்பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மழைநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுகள் பரவுவதைத் தடுக்க மாநகராட்சி 100 வார்டுகளிலும் சோதனைப் பணியில் ஈடுபட 600 களப்பணியாளர்களை மாநகராட்சி நியமித்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்:-

‘கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் மாநகராட்சி பகுதிகளில் 19 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அக்டோபர் மாதத்தில் தற்போது வரை யாரும் பாதிக்கப்படவில்லை.

இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீடுகள், கட்டிடங்களில் மழைநீர் தேங்குவது, கொசுக்கள் உற்பத்தியாவதைத் தடுக்கும் வகையில் சோதனை மேற்கொள்ள 600 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கொசுக்கள் உற்பத்தியாவதைத் தடுத்தால் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த முடியும். நியமிக்கப்பட்டுள்ள பணியாளர்கள் அனைத்து வீடுகளுக்கும் சென்று கண்காணிப்பில் ஈடுபடுவார்கள். கொசுக்கள் உற்பத்தியாகக் காரணமாக உள்ளவர்களுக்கு அபராதம் விதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்', என்று தெரிவித்தார்.

Newsletter

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...