கோவை குற்றாலத்தில் மலைவாழ் மக்களின் பாரம்பரிய இசை, நடன நிகழ்ச்சிகளுடன் வன உயிரின வார விழா கொண்டாட்டம்..!!

வனத்தை பாதுகாக்கும் பொருட்டு உறுதிமொழி எடுத்தல், புலி உருவம் பதித்த மாஸ்க் குழந்தைகளுக்கு வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.


கோவை: கோவை குற்றாலத்தில் வன உயிரின வார விழாவை முன்னிட்டு மலைவாழ் மக்களின் பாரம்பரிய இசை, நடன நிகழ்ச்சிகள் மற்றும் வனத்தை பாதுகாக்கும் பொருட்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

வன உயிரின வார விழாவினை முன்னிட்டு கடந்த 3ம் தேதி ஞாயிறன்று கோவை வனக்கோட்டம், போலாம்பட்டி வனச்சரகம், கோவை குற்றாலத்தில் வன உயிரின வார விழாவை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகள், மலைவாழ் மக்களின் பாரம்பரிய இசை, நடன நிகழ்ச்சிகள், வனத்தை பாதுகாக்கும் பொருட்டு உறுதிமொழி எடுத்தல், கையெழுத்து இடுதல், விழிப்புணர்வு துண்டுப்பிரசுரம் விநியோகித்தல், புலி உருவம் பதித்த மாஸ்க் குழந்தைகளுக்கு வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.



இந்த நிகழ்ச்சிகள் கோவை வனக் கோட்ட மாவட்ட வன அலுவலர், உதவி வன பாதுகாவலர், WGWCT குழுவினர் மற்றும் போலாம்பட்டி வனச்சரக பணியாளர்களுடன் நடத்தப்பட்டது.



தமிழக அரசு குறிப்பிட்ட கொரோனா நெறிமுறைகளைப் பின்பற்றி பொதுமக்கள் அனைவரும் இதில் பங்கேற்றனர். மேலும், நெகிழ்ச்சியுடன் தங்கள் கொண்டாட்டங்களை அடலுடனும், பாடலுடனும், பகிர்ந்து கொண்டனர்.

Newsletter

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...