கோவை மாநகராட்சியில் 1 கோடிக்கு மேல் வரி பாக்கி வைத்துள்ள நிறுவனங்களுக்கு நோட்டீஸ் - மாநகராட்சி ஆணையர் தகவல்..!

இந்நிறுவனங்கள், வரி செலுத்தவில்லை என்றால் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.



கோவை: கோவை மாநகராட்சியில் 1 கோடிக்கு மேல் வரி பாக்கி வைத்துள்ள நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு வசூலிக்கப்படும் என மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோவை மாநகராட்சி ஆணையாளர் கூறியதாவது:-

கோவை மாநகராட்சி முழுவதும் தனியார் அமைப்புடன் இணைந்து 400 இடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

தற்போது இந்த கட்டமைப்புகள் எந்த நிலையில் உள்ளன என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. கோவை மாநகராட்சிக்கு ரூ. 1 கோடிக்கு மேல் வரி செலுத்தாமல் பாக்கி வைத்துள்ள பெரிய நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதனையடுத்து, அவர்கள் வரி செலுத்தவில்லை என்றால் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், வரி வசூல் தொடர்பாக வழக்கு உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் மாநகராட்சியில் சில முடிவுகளை எடுத்துக் கொள்ளலாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் கூறினார்.

Newsletter

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...