மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் தொடர் மழையால் கோவை குற்றாலம் தற்காலிகமாக மூடல் - சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்..!!

பாதுகாப்பு காரணம் கருதி இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை கோவை குற்றாலம் மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.


கோவை: மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் தொடர் மழையின் காரணமாக நீர்வரத்து அதிகமாக உள்ளதால், கோவை குற்றாலம் தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.

கோவையின் முக்கிய சுற்றுலாத்தலமாக சாடிவயல் பகுதியின் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கோவை குற்றாலம் செயல்பட்டு வருகிறது.

கொரோனா காரணமாக தொடர்ந்து மூடப்பட்டிருந்தது. அதன் பிறகு கடந்த சில நாட்களாக சற்று குறைந்த காரணத்தினால் சமூக இடைவெளியுடன், அரசு விதித்த பாதுகாப்பு விதிமுறைகளை கையாண்டு ஒரு மணி நேரத்திற்கு 40 பேர் என்கின்ற விதத்தில் அனுமதிக்கப்பட்டது.

இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் தொடர் மழை காரணமாக நீர்வரத்து அதிகமாக உள்ளதால், இன்று முதல் கோவை குற்றாலம் தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.

மேலும், பாதுகாப்பு காரணம் கருதி இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை கோவை குற்றாலம் மூடப்படுவதாக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளனர். இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இதனிடையே, இன்று காலை தடை அறிவிப்பு தெரியாமல் சென்ற சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...