கோவையில் 17 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று திருமணம் செய்த ஆட்டோ டிரைவர் போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது..!

விசாரணையில் ஆட்டோ டிரைவர் தனக்கு ஏற்கனவே நடந்த திருமணத்தை மறைத்து பிளஸ் 2 மாணவியை ஏமாற்றி கடத்திச் சென்று திருமணம் செய்தது தெரியவந்தது.


கோவை: கோவையில் ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று 12ம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த ஆட்டோ டிரைவர் போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது-

கோவையைச் சேர்ந்த 17 வயது சிறுமி அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த மாணவியை காணவில்லை. நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தேடியும் அந்த மாணவி கண்டுபிடிக்க முடியவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இது குறித்து சாய்பாபா கோவில் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வந்தனர்.

இந்த நிலையில், அந்த மாணவியை ஆட்டோ டிரைவர் ஒருவர் ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று திருமணம் செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, அந்த ஆட்டோ டிரைவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் கோவை வடவள்ளி அருகே நாகராஜன் புரத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் (26) என்பதும் ஏற்கனவே திருமணம் ஆனவர், தனக்கு நடந்த திருமணத்தை மறைத்து பிளஸ் 2 மாணவியை ஏமாற்றி கடத்திச் சென்று திருமணம் செய்தது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து, இந்த வழக்கு கோவை மத்திய அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் நிர்மலா போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து ராமகிருஷ்ணனை கைது செய்தனர்.

பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கோவையில் பிளஸ் 2 மாணவியை ஆட்டோ டிரைவர் கடத்தி 2-வது திருமணம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...