பாமக உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது அவர்களது சொந்த விருப்பம் - பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை

உள்ளாட்சி தேர்தலில் பாஜக போட்டியிடும் இடங்களில் பொதுமக்களின் ஆதரவு அதிக அளவில் இருந்து வருவதாகவும் பெண்களுக்கு அதிக அளவில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.


கோவை: பாமக உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது அவர்களது சொந்த விருப்பம் என்றும், அவர்களது முடிவில் பாஜக தலையிடாது என்றும் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

சுதந்திர போராட்ட வீரர் திருப்பூர் குமரன் 118வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்ட சூழ்நிலையில், திருப்பூர் ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள திருப்பூர் குமரன் நினைவிடத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குமரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.



பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, திருப்பூர் குமரனின் 118வது பிறந்த நாளான இன்று பாஜக சார்பில் திருப்பூர் குமரன் நான் இருந்த இடத்திற்குச் சென்று மரியாதை செலுத்தினார். இங்கு நடந்த தடியடி சம்பவத்தில் தான் தேசியக் கொடியை கையில் பிடித்தவாறே திருப்பூர் குமரன் உயர்ந்துள்ளார். அவரது தியாகம் நிறைந்த வாழ்க்கை இன்றைய இளைஞர்களுக்கு மிகுந்த உத்வேகத்தை அளிக்க கூடிய ஒன்றாக உள்ளது என்றார்.

உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிடுவது குறித்த கேள்விக்கு, இது அவர்களின் கட்சி சார்ந்த தனிப்பட்ட விஷயம். அவர்களின் கட்சியை வளர்க்க எடுக்கப்பட்ட முடிவு, இதில் பாஜக தலையிடாது என்று தெரிவித்தார்.

உள்ளாட்சி தேர்தலில் பாஜக போட்டியிடும் இடங்களில் பொதுமக்களின் ஆதரவு அதிக அளவில் இருந்து வருகிறது. இந்த முறை போட்டியிடும் அனைத்து இடங்களிலும் நல்ல வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது. குறிப்பாக, பெண்களுக்கு அதிக அளவில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. திமுக ஆளும் கட்சியாக இருந்தாலும் மக்களின் மனநிலை என்பது மாறக்கூடிய ஒன்றானது. மக்கள் எங்களுக்கு அவர்களுடைய ஆதரவை தருவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என்று தெரிவித்தார்.

முன்னதாக, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை திருப்பூர் குமரன் சிலைக்கு மாலை அணிவிக்க வந்தபோது பாஜகவினர் அரசு விழாவில் வைக்கப்பட்டிருந்த முதல்வர் மற்றும் முன்னாள் முதலமைச்சரின் உருவப்படங்களை கட்சிக்கொடி வைத்து மறைத்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...