வால்பாறை கல்லார்குடி மக்களுக்கான மாற்றுக் குடியிருப்பு அறவழிப் போராட்டம்.!!

கல்லார்குடி மக்கள் கடந்த காந்தி ஜெயந்தி அன்று முதல் அறவழி போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கல்லார்குடி பழங்குடியின மக்கள் நடத்திவந்த அறவழி போராட்டம் திரும்பப்பெறப்பட்டது.


வால்பாறை: வால்பாறை கல்லார்குடி மக்களுக்கான மாற்றுக் குடியிருப்பு அறவழிப் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்துள்ள தாய்முடி எஸ்டேட் பகுதியில் அடர்ந்த வனப் பகுதியில் வசிக்கும் கல்லார்குடி பழங்குடியின மக்கள் கடந்த 2018-ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் குடியிருப்பை இழந்தனர்.

தொடர்ந்து தெப்பக்குள மேடு என்ற இடத்தில் தற்காலிக குடிசை அமைத்து வசித்து வந்தனர். அனுமதியின்றி வசிப்பதாகக் கூறி வனத்துறையினர் அவர்களை அப்புறப்படுத்தினர். மாவட்ட நிர்வாகத்தின் ஏற்பாட்டின் பேரில் தாய்முடி தேயிலைத் தோட்டத்தில், இருபத்தி மூன்று குடும்பங்களுக்கு எட்டு வீடுகள் ஒதுக்கப்பட்டு வசித்து வருகின்றனர்.

கல்லாறு பழங்குடியின மக்கள் கடந்த மூன்று வருடங்களாக தங்களுக்கு தங்கள் கலாச்சாரத்தின் அடிப்படையில் அடர்ந்த வனப் பகுதியான தெப்பக்குளம் மேடு பகுதியில் குடியிருப்புகளை அமைக்க அனுமதி வழங்குமாறு பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த காந்தி ஜெயந்தி அன்று முதல் அறவழி போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மலைவாழ் மக்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் அதன் மாநில நிர்வாகிகள் பொள்ளாச்சி சார் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞான தேவ ராவ் ஆனைமலை புலிகள் காப்பக மாவட்ட வன அலுவலர் கணேசன், உதவி வனப்பாதுகாவலர் செல்வம், வால்பாறை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன், வால்பாறை காவல் ஆய்வாளர் கற்பகம் ஆகியோர் முன்னிலையில் வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்த பேச்சுவார்த்தையின் இறுதியில் கல்லார்குடி செட்டில்மென்ட் பகுதி மலைவாழ் மக்களுக்கு அவர்களின் கிராமசபைக் கூட்டத்தின் தீர்மானத்தின் படி தெப்பக்குள மேடு பகுதியில் அவர்கள் குடியிருப்பு அமைக்க விரைவில் அனுமதி பெற்றுத் தரப்படும் என்று உறுதிமொழி அளிக்கப்பட்டது.



இதனைத் தொடர்ந்து கடந்த மூன்று தினங்களாக கல்லார்குடி பழங்குடியின மக்கள் நடத்திவந்த அறவழி போராட்டம் திரும்பப்பெறப்பட்டது. இந்தப் பேச்சுவார்த்தையில் மலைவாழ் மக்கள் பாதுகாப்பு சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சண்முகம், ஆலோசகர் தங்கராஜ், மாவட்டச் செயலாளர் சந்திரசேகர், வால்பாறை பகுதி செயலாளர் செல்வம், கல்லாறு குடி தலைவர் தங்கசாமி, மகளிர் அணி ராஜலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...