ஆனைமலை தேயிலைத் தோட்ட அதிபர் சங்கத்தைக் கண்டித்துக் கண்டன ஆர்ப்பாட்டம்.!!

தொழில் வரி பிடித்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தி வால்பாறையில் உள்ள தேயிலைத் தோட்டத் தொழிற்சங்க கூட்டுக் குழுவினர் வால்பாறை முடீஸ் பகுதியிலுள்ள ஆனைமலை தேயிலைத் தோட்ட அதிபர் சங்கத் தலைவர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


வால்பாறை: தொழில் வரி பிடித்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தி வால்பாறையில் உள்ள தேயிலைத் தோட்டத் தொழிற்சங்க கூட்டுக் குழுவினர் வால்பாறை முடீஸ் பகுதியிலுள்ள ஆனைமலை தேயிலைத் தோட்ட அதிபர் சங்கத் தலைவர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் 60-க்கும் மேற்பட்ட தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. இவற்றில் தமிழ்நாடு அரசின் தேயிலைத் தோட்ட கழக தேயிலைத் தோட்டங்களும் அடங்கும்.

இவற்றில் நிரந்தர மற்றும் தற்காலிக தொழிலாளர்களாக சுமார் 50-ஆயிரம் பேர் பணியாற்றி வருகிறார்கள். இந்நிலையில் தமிழ்நாடு அரசின் தேயிலைத் தோட்ட கழக தொழிலாளர்களுக்குத் தொழில் வரி பிடித்தம் செய்யப்படுவதில்லை.

ஆனால் தனியார் தேயிலைத் தோட்டங்களில் தொழிலாளர்களின் சம்பளத்தில் தொழில் வரி பிடித்தம் செய்யப்படுகிறது. இதைக் கண்டித்து தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் சார்பில் பல்வேறு கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

ஆனால் ஆனைமலை தேயிலைத் தோட்ட அதிபர் சங்கம் தொழிலாளர்களின் கோரிக்கையைக் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து தொழிலாளர்களின் சம்பளத்தில் தொழில் வரியை பிடித்தம் செய்து வருகின்றனர்.

இதனைக் கண்டித்து வால்பாறையில் உள்ள தேயிலைத் தோட்டத் தொழிற்சங்க கூட்டுக் குழுவினர் வால்பாறை முடீஸ் பகுதியிலுள்ள ஆனைமலை தேயிலைத் தோட்ட அதிபர் சங்கத் தலைவர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



இந்த ஆர்ப்பாட்டத்திற்குத் தொழிற்சங்க கூட்டுக் குழு அமைப்பின் தலைவர் வால்பாறை வீ.அமீது தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் சலாவுதீன் காங்கிரஸ் யூ கருப்பையா, விடுதலை சிறுத்தை வீரமணி, கேசவ மருகன், இ.கம்.மோகன், மாணிக்கம் பெரியசாமி, கம்.பரமசிவம் உட்பட ஏராளமான தொழிற் சங்க நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

Newsletter

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...