கொசுவினால் ஏற்படும் நோய்களைத்தவிர்க்க பொதுமக்களிடையே அதிகாரிகள் விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும் – கோவை மாநகராட்சி ஆணையர் வேண்டுகோள்

மழைக்காலம் தொடங்கிவிட்டதால் கொசுவினால் ஏற்படும் நோய்களைத்தவிர்க்க மக்களிடையே போதிய விழிப்புணர்வை அதிகாரிகள் ஏற்படுத்த வேண்டும் என கோவை மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலப்பகுதிகளில் தூய்மைப்பணியாளர்கள் மேற்கொள்ளும் வளர்ச்சிப்பணிகள் குறித்து இன்று மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலரான ராஜகோபால் சுன்கரா நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.

இதில் ஒரு பகுதியாக மாநகராட்சி மத்திய மண்டலம்‌ வார்டு எண்‌.52-க்குட்பட்ட டாக்டர்‌.ராதாகிருஷ்ணன்‌ சாலையில்‌ தூய்மைப்‌ பணியாளர்களின்‌ பணிகள்‌ குறித்து ஆய்வு மேற்கொண்ட ஆணையாளா், தூய்மைப்பணியாளார்களின்‌ வருகைப்‌ பதிவேடுகளை ஆய்வு செய்தார். அதனைத்தொடர்ந்து தூய்மைப்பணியாளார்கள்‌ நேரம்‌ தவறாமல்‌ பணிக்கு வருகைத் தர வேண்டும் எனவும் வீடுகள் தோறும்‌ குப்பைகளைச் சேகரிக்கும்‌ போது மக்கும்‌ குப்பை, மக்காத குப்பை என தரம்‌ பிரித்து சேகரிக்க வேவேண்டும்‌ எனக் கேட்டுக்கொண்டார்.

மேலும் மழைநீர் வடிகால்‌வாய்களில் அடைக்கப்பட்டுள்ள குப்பைகளை அகற்றி நீர் தேங்காமல்‌ செல்லும்‌ வகையில்‌ கால்வாயினை சுத்தப்படுத்திட வேண்டும்‌ என ஆணையர் தெரிவித்தார். மேலும் கொசுவினால்‌ ஏற்படும்‌ நோய்களைக்‌ தவிர்க்கப் பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வினை ஏற்படுத்திட வேண்டும்‌ எனவும் கோவை தூய்மையான மாநகராட்சியாக திகழவேண்டும் என்றால் தங்களுடையப் பணிகளை சிறப்பாகச் செய்திட வேண்டும்‌ என கேட்டுக்கொண்டார். இதோடு அனைவரும்‌ முகக்கவசம்‌ அணிந்துப் பணியாற்ற வேண்டும்‌ எனவும் கிருமிநாசினிக் கொண்டு கைகளை அடிக்கடி சுத்தப்படுத்திட வேண்டும்‌ மற்றும் தடுப்பூசி போடாதவர்கள்‌ கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்‌ என ஆணையர் கூறினார்.



இதனைத்தொடர்ந்து தொடர்ந்து, வார்டு எண்‌.53க்குட்பட்ட ஹரிபுரம்‌ பகுதியில்‌ சட்டமன்ற உறுப்பினர்‌ மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.30 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ புதிதாககட்டிமுடிக்கப்பட்ட சமுதாயக்‌ கூடத்தை பார்வையிட்ட ஆணையாளர், அப்பகுதியிலுள்ள அங்கன்வாடி மையத்தை நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.



மேலும வார்டு எண்‌.53க்குட்பட்ட தனலட்சுமி நகர்‌, பாலாஜி ST மற்றும்‌ 72வது வார்டுக்குட்பட்ட ஆடிஸ்‌ வீதி ஆகிய பகுதிகளிலுள்ளமாநகராட்சி பொது ஒதுக்கீடு இடத்தை நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



பின்னர், வார்டு எண்‌.74, ஜி.எம்‌.நகரில்‌ புதிய தார்சாலை அமைக்கப்பட்டு வருவதைப் பார்வையிட்டதோடு சாலையின்‌ தரத்தினைக் குறித்து மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா கேட்டறிந்தார்.



இதோடு கோயம்புத்தூர்‌ மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில்‌ அமைக்கப்பட்டுள்ள மழைநீர்‌ சேகரிப்பு தொட்டியை மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்௧ரா நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.



இந்த ஆய்வின்போது மத்திய மண்டல உதவி ஆணையாளா்‌ சுந்தாராஜன்‌, உதவி செயற்பொறியாளர்‌ பிரபாகரன்‌, மண்டல சுகாதார

அலுவலர்‌ திருமால்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ ஆகியோர்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...