'டாஸ்மாக்' கடையை உடனே அகற்றணும்: திருப்பூரில் பொதுமக்கள் ஆவேசம்.!!

திருப்பூரில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள அரசு மதுபானக் கடையை அகற்ற வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டம். ஒரு வாரக் காலத்தில் கடையை அகற்றாவிட்டால் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தொடர் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர்.


திருப்பூர்: திருப்பூரில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள அரசு மதுபானக் கடையை அகற்ற வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் கல்லூரி சாலை கொங்கணகிரி பகுதியில் குடியிருப்புகள் மிகுந்த பகுதியில் அமைந்துள்ள அரசு மதுபானக்கடையை அகற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்து வந்தனர்.



பிரசித்தி பெற்ற கொங்கணகிரி முருகன் கோயில் மாவட்டத்திலேயே அதிக மாணவர்கள் பயிலக் கூடிய சிக்கண்ணா அரசு கல்லூரி ஆகியவை மிக அருகாமையில் உள்ள இந்த டாஸ்மாக் கடையால் கோவிலுக்குச் செல்லும் பெண்கள் மற்றும் கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவ மாணவிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதால் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மாவட்ட நிர்வாகம் உடனடியாக பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள அரசு மதுபானக் கடையை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் ரமேஷ் தலைமையில் இன்று கடை முன்பாக கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்னும் ஒரு வாரக் காலத்தில் கடையை அகற்றாவிட்டால் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கடை முன்பாக தொடர் போராட்டம் நடத்தப்படும் எனவும் கட்சியினர் தெரிவித்தனர்.

Newsletter

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...