கோவை கிணத்துக்கடவு அருகே தூய்மை பணியாளர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக 10 நிமிடங்களுக்கு மேல் தலைகீழாக நின்று பள்ளி மாணவி அசத்தல்..!

கொரோனோ தொற்று காலத்தில் தங்களது உயிரைப் பற்றி கவலைப்படாமல் பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக இச்செயலை செய்துள்ளார்.


கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே உள்ள கோவில்பாளையத்தில், தூய்மை பணியாளர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக 10 நிமிடங்களுக்கு மேல் தலைகீழாக நின்ற சூர்யா ஸ்ரீ என்ற பள்ளி மாணவிக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள கக்கடவு கிராமத்தைச் சேர்ந்த அபிராமி கிருபாகரன் - கிருத்திகா தம்பதியினரின் 8 வயது மகள் சூர்யா ஸ்ரீ. இவர் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.

கொரோனோ பெருந்தொற்று காலத்தில் பொதுமக்கள் நோய்த்தொற்றுக்கு உள்ளாகிய போது நோய்த் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட முன்கள பணியாளர்களின் பங்கு மகத்தானது. இதைக் கூர்ந்து கவனித்து வந்த சிறுமி சூர்யாஸ்ரீ இவர்களுக்கு நன்றி செலுத்த வேண்டும் என்று முடிவு செய்து தலைகீழாக நிற்க பயிற்சி எடுத்துள்ளார்.



இந்த நிலையில், இன்று கோவில்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கொரோனோ தொற்று காலத்தில் தன் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக துப்புரவு பணியாளர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் முன்னிலையில் 10 நிமிடத்திற்கு மேல் தலைகீழாக நின்று சிரசாசனம் செய்து காட்டி அசத்தினார்.



மேலும், தூய்மை பணியாளர்களுக்கு வேஷ்டி, சேலை மற்றும் முகக்கவசம், கையுறை உள்ளிட்ட நோய்த் தடுப்பு உபகரணங்களை இலவசமாக வழங்கினார்.

கொரோனா காலத்தில் வீடுகளை விட்டு வெளியில் வராமல் பொது மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடந்த நேரத்தில் உயிரைப் பணயம் வைத்து பணியாற்றிய முன்கள பணியாளர்களுக்கு நன்றி செலுத்துவது மகிழ்ச்சி அளிப்பதாக சிறுமியின் தாயார் தெரிவித்தார்.

சிறுமியின் இந்த செயலை கண்டு ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ்குமார் உள்ளிட்ட ஊர் பொதுமக்கள் சால்வை அணிவித்துப் பாராட்டினர்.

Newsletter

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...