விவசாயிகள் உயிரிழந்த விவகாரம்: குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை மனு.!!

மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடத்திய விவசாயிகள் உள்ளிட்ட 8-பேர் உயிரிழந்த சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோவை மாவட்ட குழு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு.



கோவை: மத்திய அரசு இயற்றியுள்ள மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடத்திய விவசாயிகள் உள்ளிட்ட எட்டு பேர் உயிரிழந்த சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை விதிக்கபட வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோவை மாவட்ட குழு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.



மத்திய அரசு இயற்றியுள்ள மூன்று வேளாண் சட்டங்களைக் கண்டித்து விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நேற்று உத்தரப்பிரதேச துணை முதல்வர் கேசவ் மவுரியா மற்றும் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா ஆகியோரின் வருகைக்கு எதிராக விவசாயிகள் நடத்திய போராட்டம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் வன்முறையாக மாறியது.

இதில், அமைச்சர் மிஸ்ராவின் கார் ஏறி இறங்கியதில் 4-விவசாயிகள் கொல்லப்பட்டதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. இந்த வன்முறையில் 8-பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

உ.பி துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா கலந்து கொள்ளவிருந்த நிகழ்ச்சியில் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்ய விவசாயிகள் திக்குனியாவில் கூடினர்.

மகாராஜா அக்ரஸேன் விளையாட்டு மைதானத்தில், அமைக்கப்பட்டிருந்த ஹெலிபேட்டை ஆயிரக்கணக்கான விவசாயிகள் முற்றுகையிட்ட காரணத்தால் துணை முதல்வர் கேசவ் மவுரியா ஹெலிகாப்டர் பயணத்தைக் கைவிட்டு சாலை மார்க்கமாகச் சம்பவ இடத்திற்கு வந்தடைந்தார்.

விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்து கொண்டு இருந்த நிலையில், துணை முதலமைச்சரை வரவேற்க மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா அந்த இடத்திற்கு வந்தடைந்தார். அப்போது மிஸ்ராவின் கார் ஏறியதில் மூன்று விவசாயிகள் உயிரிழந்ததால், எதிர்ப்பாளர்கள் இரண்டு வாகனங்களுக்கு தீ வைத்ததில் பல விவசாயிகள் காயமடைந்தனர்.

இந்த சம்பவத்தில் 8-பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்த நிலையில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை மாவட்ட குழுவினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தனர்.

அதில் உயிரிழந்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கிட வேண்டும். நீதி விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கிட வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும் வரும் காலங்களில் நியமான முறையில் போராடும் விவசாயிகளுக்கு அரசு உரியப் பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடத்திய விவசாயிகள் உள்ளிட்ட எட்டு பேர் உயிரிழந்த சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை மாவட்ட குழு கோரிக்கை மனு அளித்தனர். மத்திய அரசு இயற்றியுள்ள மூன்று வேளாண் சட்டங்களைக் கண்டித்து விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று உத்தரப்பிரதேச துணை முதல்வர் கேசவ் மவுரியா மற்றும் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா ஆகியோரின் வருகைக்கு எதிராக விவசாயிகள் நடத்திய போராட்டம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் வன்முறையாக மாறியது.

இதில், அமைச்சர் மிஸ்ராவின் கார் ஏறி இறங்கியதில் 4-விவசாயிகள் கொல்லப்பட்டதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. இந்த வன்முறையில் 8-பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. உ.பி துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா கலந்து கொள்ளவிருந்த நிகழ்ச்சியில், மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்ய விவசாயிகள் திக்குனியாவில் கூடினர்.

மகாராஜா அக்ரஸேன் விளையாட்டு மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த ஹெலிபேட்டை ஆயிரக்கணக்கான விவசாயிகள் முற்றுகையிட்ட காரணத்தால் துணை முதல்வர் கேசவ் மவுரியா ஹெலிகாப்டர் பயணத்தைக் கைவிட்டு சாலை மார்க்கமாகச் சம்பவ இடத்திற்கு வந்தடைந்தார்.

விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்து கொண்டு இருந்த நிலையில் துணை முதலமைச்சரை வரவேற்க மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா அந்த இடத்திற்கு வந்தடைந்தார். அப்போது மிஸ்ராவின் கார் ஏறியதில் மூன்று விவசாயிகள் உயிரிழந்ததால், எதிர்ப்பாளர்கள் இரண்டு வாகனங்களுக்கு தீ வைத்ததில் பல விவசாயிகள் காயமடைந்தனர்.

இந்த சம்பவத்தில் 8-பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்த நிலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை மாவட்ட குழுவினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தனர்.

அதில், உயிரிழந்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கிட வேண்டும் நீதி விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கிட வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும் வரும் காலங்களில் நியமான முறையில் போராடும் விவசாயிகளுக்கு அரசு உரியப் பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...