அத்தியாவசிய தேவைகளை உடனடியாக ஏற்படுத்தித் தர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு!!

வாரத்தில் நான்கு முதல் ஐந்து முறை விஷ பாம்புகளும், தேள், பூரான் போன்ற விஷப் பூச்சிகளும் குடியிருப்பு பகுதிக்குள் வருவதாகவும், இது குறித்து தகவல் அளிக்கையில் தீயணைப்புத்துறையினர் பாம்புகளைப் பிடித்துச் செல்வது வாடிக்கையாக உள்ளதாகத் தெரிவித்தனர்.


கோவை: அத்தியாவசிய தேவைகளை உடனடியாக ஏற்படுத்தித் தர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை மாவட்டம் காரமடை பேரூராட்சிக்கு உட்பட்ட பூதிமேடு புத்தர் நகரில் 287-குடும்பங்கள் வசித்து வருகின்றனர். 1996-ஆம் ஆண்டு ஆதிதிராவிடர் நலத்துறையினர் மூலம் இலவச வீட்டுமனைப்பட்டா பட்டியலின மக்களுக்காக வழங்கப்பட்டது.



கடந்த 25-ஆண்டுகளாகக் குடிநீர், தெருவிளக்கு, மின்சாரம், சாக்கடை வசதிகள் இல்லாமல் சிரமத்திற்கு இடையே வாழ்ந்து வருவதாகத் தெரிவித்தனர். மேலும் வாரத்தில் நான்கு முதல் ஐந்து முறை விஷ பாம்புகளும், தேள், பூரான் போன்ற விஷப் பூச்சிகளும் குடியிருப்பு பகுதிக்குள் வருவதாகவும், இது குறித்து தகவல் அளிக்கையில் தீயணைப்புத்துறையினர் பாம்புகளைப் பிடித்துச் செல்வது வாடிக்கையாக உள்ளதாகத் தெரிவித்தனர்.

நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதாகக் கூறி மனுக்களை அதிகாரிகள் நிராகரித்து வருவதாகவும், தங்களது பகுதியின் மீது இருந்த வழக்கின் தீர்ப்பு தங்களுக்குச் சாதகமாக வந்த போதும் அதையே காரணம் காட்டி காரமடை பேரூராட்சி அதிகாரிகள் அடிப்படை வசதிகளைப் புறக்கணிப்பதாகக் குற்றம் சாட்டினர்.



அத்தியாவசிய தேவைகளை உடனடியாக ஏற்படுத்தித் தர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...