பொதுத்துறைகளை பாதுகாக்கும் போராட்டத்தில் இளைஞர்கள் முன்னிற்க வேண்டும் - பி.ஆர்.நடராஜன் எம்.பி

கோவை இருகூர் கிளை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் விளையாட்டுக் கழகம் சார்பில் கிரிக்கெட் வலைப் பயிற்சி மையத்தினை பிஆர் நடராஜன் துவக்கி வைத்தார்.


கோவை: பொதுத்துறை நிறுவனங்களை ஒன்றிய அரசு விற்றுக்கொண்டிருக்கும் நிலையில், அதனைப் பாதுகாக்கும் போராட்டத்தில் இளைஞர்கள் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டும் என பி.ஆர்.நடராஜன் எம்.பி தெரிவித்தார்.

கோவை இருகூர் கிளை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் விளையாட்டுக் கழகம் சார்பில் கிரிக்கெட் வலைப் பயிற்சி மையத்தின் துவக்க விழா ஞாயிறன்று நடைபெற்றது.



டைனமோ கிளப் மைதானத்தில் அமைந்துள்ள இந்த கிரிக்கெட் வலைப் பயிற்சி மையத்தை கோவை நாடாளுமன்ற உறுப்பினர் திறந்துவைத்தார்.

அப்போது அவர் பேசுகையில், உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க விளையாட்டு பயிற்சி என்பது மிக முக்கியமானதாக உள்ளது. அதுவும் நமது நாட்டில் கிரிக்கெட் மீதான மோகம் இளைஞர்களை வெகுவாக ஈர்த்துள்ளது.

விடுமுறை நாட்களில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் நமது மாவட்டத்தில் கிரிக்கெட் மட்டைகளோடு காலி மைதானத்தை தேடி அலைகிற காட்சியை பார்க்க முடிகிறது. அத்தகைய ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு முறையான பயிற்சி அளித்து அவர்களை தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் திறமையை உருவாக்க வேண்டும். அத்தகைய உன்னதமான பணிகளை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் விளையாட்டு கழகம் மேற்கொண்டிருக்கிறது.

பொதுத்துறை நிறுவனங்களில் விளையாட்டுத்துறை ஒதுக்கீட்டின் மூலம் ஏராளமான இளைஞர்கள் வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர். அதேநேரத்தில், மோடி தலைமையிலான ஒன்றிய அரசு ஆட்சியில் இருக்கிற காலத்திற்குள் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் விற்று விடுமோ என்கிற அச்சம் நிலவுகிறது.

நமது மக்களின் வரிப்பணத்தில், உழைப்பில் உருவான பொதுத்துறை நிறுவனங்களை ஒன்றிய அரசு தனியாருக்கு விற்பதை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. பொதுத்துறை நிறுவனங்கள் இருந்தால்தான் விளையாட்டுத் துறை உள்ளிட்ட ஒதுக்கீட்டின் மூலம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இத்தகைய பொதுத்துறை நிறுவனங்களைப் பாதுகாக்கிற போராட்டத்தில் இளைஞர்கள் முன்னிற்க வேண்டும்.

கோவை மாவட்டத்தில் சின்னதடாகம், பெரிய தடாகம் பகுதிகளில் உள்ள இளைஞர்கள் அதிகம் பேர் விளையாட்டுத் துறை ஒதுக்கீட்டின் மூலம் பொதுத்துறை நிறுவனங்களில் வேலை வாய்ப்பை பெற்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.

அதுபோலவே, இருகூரிலும் அத்தகைய இளைஞர்கள் உருவாக வேண்டும். வேலை வாய்ப்பை பெற வேண்டும் என வாழ்த்துகிறேன் என்றார். முன்னதாக கிரிக்கெட் வலைப் பயிற்சியில் ஈடுபடும் இளைஞர்களுக்கு கிரிக்கெட் மட்டை மற்றும் பந்துகளை பி.ஆர்.நடராஜன் எம்பி வழங்கினார்.

இந்நிகழ்ச்சிக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் இருகூர் கிளை செயலாளர் பிரேம்குமார் தலைமை தாங்கினார். இதில் கோவை மாவட்ட கிரிக்கெட் பயிற்சி மையத்தின் துணை செயலாளர் சுரேஷ், வலை பயிற்சி மையம் அமைந்திட உதவி புரிந்தகனேசன், வெல்டர் முருகன் ஆகியோர் கோவை நடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் அவர்களுக்கு சால்வை அணிவித்து கௌரவித்தார்.

இந்நிகழ்வை வாழ்த்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் முன்னாள் மாவட்ட செயலாளர் ஆர்.வேலுசாமி, மாவட்ட தலைவர் ஸ்டாலின்குமார் உள்ளிட்டோர் உரையாற்றினர்.



இந்நிகழ்வில் சத்துணவு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநில தலைவர் பழனிச்சாமி, மார்க்சிஸ்ட் கட்சியின் கிளை செயலாளர்கள் சண்முகம், விஜயராகவன் மற்றும் வாலிபர் சங்க விளையாட்டு கழக இளைஞர்கள் திரளானோர் பங்கேற்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...