காந்தி ஜெயந்தியன்று விடுமுறை அளிக்காமல் தொழிலாளர்களிடம் வேலை வாங்கிய 153 நிறுவனங்கள் மீது நடவடிக்கை..!

விடுமுறை அளிக்காத 153 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக கோவை தொழிலாளர் நலத்துறை உதவி கமிஷ்னர் தெரிவித்துள்ளார்.



கோவை: காந்தி ஜெயந்தியன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காமல் விதி மீறிய 153 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கோவை தொழிலாளர் நலத்துறை உதவி கமிஷ்னர் (அமலாக்கம்) வெங்கடேசன் அறிக்கையில்:

தேசிய விடுமுறை தினமான காந்தி ஜெயந்தியன்று, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி பகுதிகளில், தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதா அல்லது பணிபுரிய அனுமதிக்கும் பட்சத்தில் முன் அறிவிப்புகள் வழங்கப்பட்டுள்ளதா என்று கடைகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் என 204 நிறுவனங்களில் ஆய்வு செய்யப்பட்டது.

இதில், தேசிய மற்றும் பண்டிகை விடுமுறை நாட்கள் சட்டத்தின் கீழ், காந்தி ஜெயந்திக்கு தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத மற்றும் முன் அறிவிப்பு அளிக்காத கடைகள், 67 உணவு நிறுவனங்கள், 82 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் மற்றும் 4 கடைகள் என 153 நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Newsletter

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...