கோவையில் ரயில் மோதியதில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் உடல் துண்டாகி பரிதாபமாக பலி..!!

இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரியாத நிலையில், அடையாளம் தெரிந்தவர்கள் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் ரயில் மோதியதில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் உடல் துண்டாகி பலியான சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை மேட்டுப்பாளையம் ரயில்வே போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் இன்று காலை ரயில் மோதி 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் உடல் துண்டாகி பரிதாபமாக பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



இந்த நிலையில், இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரிய வில்லை? இது குறித்து மேட்டுப்பாளையம் ரயில்வே போலீசாரை தொடர்பு கொண்டு தெரிவிக்க அடையாளம் தெரிந்தவர்கள் காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.

உடை, அங்கமச்ச அடையாளம்

1.ரோஸ்கலர் முழுக்கை சட்டை

2.முக்காகால் பார்மடாஸ் மஞ்சள் பேண்ட்.

3.வலது பக்க மார்பில் ஒரு மச்சம்

4.இடது மார்பில் ஒரு காயத்தழும்பு.

5.உடல் வெள்ளை நிறம்.



மேட்டுப்பாளையம் இரயில்வே காவல் உதவி ஆய்வாளர் N.சந்தி, மற்றும் தலைமை காவலர் ஜெயசித்ரா(Crime No 13/2021) வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், அடையாளம் தெரிந்தால் (94981 27499, 04254-222925) என்ற தெலைபேசி எண்ணிற்கு தகவல் தெரிவிக்க கேட்டு கொள்ளப்படுகிறது.

Newsletter

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...