வால்பாறை அருகே கல்லார் ஆதிவாசி மக்கள் மூன்றாம் நாளாக கவனயீர்ப்பு போராட்டம்..!

தெப்பக்குளம் மேடு பகுதியில் இடம் வழங்க கோரி மூன்றாம் நாளாக ஆதிவாசி பழங்குடி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


கோவை: வால்பாறையில் தெப்பக்குளம் மேடு பகுதியில் இடம் வழங்க கோரி மூன்றாம் நாளாக ஆதிவாசி பழங்குடி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை மாவட்டம் வால்பாறை அருகே கல்லார் ஆதிவாசி மக்கள் மூன்றாம் நாளாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை மாவட்டம் வால்பாறை அருகே கல்லார் ஆதிவாசி பழங்குடி கிராமத்தில் சுமார் இருபத்தி மூன்று குடும்பங்கள் வாழ்ந்து வந்தனர். கடந்த 2018ம் ஆண்டு அதிக கன மழை பெய்து வனப் பகுதியில் நிலச்சரிவு மரங்கள் சரிந்து விழுந்து பாதிக்கப்பட்டது.

இதில் கல்லார் ஆதிவாசி பழங்குடியினர் கிராமமும் பாதிக்கப்பட்டது. அங்கு வாழ முடியாமல் மண் சரிந்து நிலச்சரிவு ஏற்படும் என்று வட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்று இடம் வழங்க வேண்டும் என்று மனு கொடுத்தனர்.

மேலும், அதிக கன மழை பெய்து வந்ததால் அங்கு தங்க முடியாமல் வனப்பகுதியில் பாதுகாப்பான இடத்தில் குடிசைகள் அமைத்து தங்கினர். அதை சட்டத்திற்குப் புறம்பானது என்று வனத்துறையினர் குடிசைகளை அப்புறப்படுத்தி மாவட்ட ஆட்சியரின் மற்றும் சார் ஆட்சியர் வன அலுவலர்கள் 23 குடும்பங்களை தாய்முடி எஸ்டேட் தோட்ட குடியிருப்பில் தங்க வைத்தனர்.

கடந்த 3 ஆண்டுகளாக எஸ்டேட் குடியிருப்பு பகுதியில் தங்கியிருந்து வாழ்ந்து வருகின்றனர். ஆதிவாசி பழங்குடி மக்களுக்கு மாவட்ட ஆட்சியரின் உத்தரவிற்கிணங்க தெப்பக்குளம் மேடு என்ற பகுதியை இடம் தேர்வு செய்யப்பட்டது.

இந்நிலையில், தற்போது வரை அங்கு இடம் அவர்களுக்கு வழங்காததைக் கண்டித்தும் கடந்த 3 ஆண்டுகளாக தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் குடியிருப்புக்குள் தங்க வைத்திருப்பதாகவும் ஆதிவாசி பழங்குடியின மக்களின் கலாச்சாரமும் சுதந்திரமும் பாதிக்கப்படுவதாகவும் கூறி தெப்பக்குளம் மேடு பகுதியில் இடம் ஒதுக்கித் தர தெப்பக்குளம் மேடு வனப்பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினர்.



தொடர்ந்து பொள்ளாச்சி சார் ஆட்சியர் தாக்கரே சுபம் நான தேவ் ராவ் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் கணேசன் ஆகியவர்கள் போராட்டம் நடத்தும் இடத்திற்கு வந்து ஆதிவாசி பழங்குடி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையில் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட இடங்களில் வாழும் ஆதிவாசி பழங்குடி மக்களுக்கு ஏற்கனவே இருந்த இடங்களை அளவு செய்து தேசிய புலிகள் காப்பகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அதை மாற்றுவதற்கு எங்களுக்கு அதிகாரம் இல்லை என்பதாகவும் அரசாங்கத்திற்கு கோரிக்கை வைத்துள்ளதாகவும் தங்களுக்கு இடம் தேர்வு செய்யப்பட்ட இடத்தை ஆய்வு செய்து, அவை அரசாங்கத்தின் ஒப்புதலின்படி அரசாங்கத்துக்கு அனுப்பப்பட்டு உள்ளதாகவும் சிறிது காலம் ஆகும், அதை சரியான முறையில் நடத்தி தருவதாகவும் தற்சமயம் போராட்டத்தை கைவிட்டு செல்ல வேண்டும் என்று தெரிவித்தனர்.

இதையடுத்து, ஆதிவாசி பழங்குடி மக்கள் சார் ஆட்சியர் இடமும், கலை இயக்குனர் இடமும் மூன்று ஆண்டுகளாக தேயிலைத் தோட்டக் குடியிருப்பு பகுதியில் வாழ்ந்து வருகிறோம். நாங்கள் பழங்குடியின கிராமத்தில் பெண்களுக்கு தேவையான தனிமையில் இருந்து சுதந்திரமாக இருந்தோம் உணவு பழக்கங்கள் மாறிவிட்டது. எங்களுடைய கலாச்சாரமும் மாறிவிட்டது. ஆதலால், அரசாங்கம் எங்களுக்கு இடம் தேர்வு செய்யப்பட தெப்பக்குளம் மேடு பகுதியில் இடம் வழங்க வேண்டும் என்று தெரிவித்தனர்.



ஆனால், பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் மூன்றாம் நாளாக இன்று ஆதிவாசி பழங்குடி மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று கல்லார் செட்டில்மெண்ட் மக்களுக்கு தெப்பக்குளம் மேட்டில் இடம் ஒதுக்கி தர வேண்டும் என்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...